Tuesday, June 29, 2010

ராவணன் விமர்சனம் - ஒரு புதிய கோணம்!

ராவணன் - மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆவலாக போன  பல பேருக்கு கல்ப்பாக பல்பு குடுத்த படம்
எல்லோரும் பதிவுல போட்டி போட்டுகிட்டு பிரிச்சு மேயறாங்க.
இதில் நான் இயக்குனர் தகரம் முனிரத்னம் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவர் ரொம்ப நல்லவர், உண்மை பேசுபவர்.  சத்தியவான்.

எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.

ஆங்கிலத்தில் PORTMANTEAU வகை சொற்கள் உண்டு. PORTMANTEAU என்றால் இரண்டு வார்த்தைகள் கலந்து ஒரு புதிய வார்த்தையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, MOTEL என்பது நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தை /  தங்கும் விடுதியை  குறிக்கும் ஒரு சொல். அது MOTORWAY + HOTEL ஆகிய இரண்டு  சொற்கள் இணைந்த ஒரு PORTMANTEAU .

இது போல, ராவணன் என்பது ஒரு தமிழ் PORTMANTEAU . (எங்க சுத்தி எங்க வரோம் பாத்தீங்க இல்ல)
ராவணன் - அதாவது, இந்த சொல்லை நன்றாக பிரித்து பார்த்தால் ராவ +  வந்தவன் என்றே பொருள் வருகிறது. நம்மை எல்லாம் உயிரோடு ராவுவதற்க்கே (அறுப்பதற்கே) இயக்குனர் தகரத்தால் எடுக்கப்பட்ட படம்.

தான் படம் எடுத்ததன் நோக்கத்த சாமர்த்தியமா டைடிலுகுல்லையே ஒளிச்சு வெச்சு சொல்லி இருக்கிறார்.

மடப்பசங்க எல்லோரும் (நானும் சேத்தி தான்) டைடில சரியாய் புரிஞ்சிக்காம, வரிஞ்சி கட்டி வரிசைல நின்னு, ராமாயணம் ரீமேக்கு, இயக்குனர் தகரம் எடுத்து இருக்காரு போயி பாத்துட்டு, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி திரியரிங்க.

எல்லோரும் அவர விடுங்க பா.......ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.....டைட்டில்ல உண்மைய தான் சொல்லி இருக்காரு.....

( படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே நானும் நண்பர்களும் கார் எடுத்துகிட்டு ஒரு மணி நேரம் ஒட்டி, ரெண்டு மணிநேரம் இம்மிக்ரேஷன் வரிசியைல நின்னு பஹ்ரைன் போயி (நாடு விட்டு நாடு!!!)  முதல் ஷோ பாத்தோம்........ )

சேம் ப்ளட் யா. ஸோ, கூல் டௌன் கூல் டௌன்!!!!

1 comment:

Anonymous said...

மட்டிப்பயலுக்கு எப்படி இது புரியும்?
உன் மூளைல டாப்ப கழட்டி மண்ணக்கொட்ட,உனக்கு அது இருந்தும் பயனில்லை,உமி மூட்டை தான் இருக்கு உள்ள,லூசு.மணிய பத்தி எதாவது சொன்ன பல்ல உடைப்பேன்