Monday, February 15, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - V

இங்க ஒன்னும் பெருசா suspense   இல்லை.

ஏன்னா, கண்டிப்பா offer வந்து இருக்கும்னு சொல்ல வேண்டியது இல்லை.  (அப்புறம் எப்படி நான் இந்த ஊருக்கு வந்து இருப்பேன்??? ) ABDULAZIZ AL-MADI கூப்பிட்டு நான் தேர்வு செய்யப்பட்ட விஷயத்த சொன்னார்.  இனி மேற்கொண்டு என்னை முதலில் கூப்பிட்ட HR consultantடை காண்டாக்ட் பண்ண சொன்னார்.  அவனை கூப்பிட்டா, அவன் சொன்னத கேட்டு மயக்கம் வராத குறை தான்.

கொஞ்சமா சொன்னான்:
௧. முதலில் என்னோட MBA certificateடை மாநில அரசிடம் அத்தாட்சி பெறணும். (அண்ணாமலை பல்கலைகழகம், சிதம்பரம் மற்றும் தலைமை செயலகம், சென்னை)
௨. அப்புறம் மத்திய அரசிடம் (மனிதவள மேம்பாட்டு துறை) அத்தாட்சி பெறணும். (டெல்லி)
௩.  அப்புறம் சவுதி தூதரகத்திடம்  அத்தாட்சி பெறணும். (டெல்லி)
௪.  அப்புறம் மருத்துவ பரிசோதனை. (மும்பை)
௫.  அப்புறம் சவுதி தூதுரகத்தோட நேர்முக தேர்வு,
௬. அப்புறம் விசா அடிக்கப்படும் 

இப்படி நிறைய அப்புறம்! அப்புறம்!.........

கிறுக்குத்தனமா நிறைய  நடைமுறைகள்.  அதுல ஒரு காமெடி கேளுங்க.  மருத்தவ பரிசோதனை பாஸ்போர்ட் வழங்கப்பட்ட மாநிலத்துல தான் பண்ணனுமாம்.  இல்லாட்டி மும்பைல தான் பண்ணனுமாம்.  எல்லாரும் கோவாவுக்கு டூர் போவாங்க. நான் மெடிகல் டெஸ்ட் எடுக்க போகனுமா? என்ன கொடுமை சார்?  உலகத்துல இந்த வேதனை என்னோட எதிரிக்கு கூட வர கூடாது.

பிள்ளையார் சுழி  போட்டு, மேற்கொண்ட கிரகத்த எல்லாம் ஒவ்வொன்ன ஆரம்பிச்ச போது, சம்பா பாங்க்ல இருந்து ஒரு குரியர்  வந்தது. எல்லாம் கிரகமும்  அரபிக்ல இருந்தது. ஒரே ஒரு லெட்டர் மட்டும் ஆங்கிலத்துல.  ஆஹா! சந்தோஷமா, நம்பி படிக்க ஆரம்பிச்சேன்.  THE LETTER IS ADDRESSED TO ROYAL SAUDI EMBASSY, KARACHI, PAKISTAN REQUESTING FOR MY VISA STAMPING. அட ஞான சூனியங்களா, லெட்டர் அடிக்கும் போது கவனிக்க மாடீன்களா? சவுதி விசா ஸ்டாம்ப் பண்ண நான் பாகிஸ்தான் போகனுமா? அதுக்கு இன்னொரு விசா வாங்கனுமா?  என்ன எழவுடா இது? விசா ஸ்டாம்ப் அடிக்கறதுக்குள்ள நான் காலியாயிடுவேன் போல இருக்கே? இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள இவ்ளோ  ரகளையா?


(இதற்கிடையில், கடவுள் அருளால், நவம்பர் ஆறாம் தேதி எங்களுக்கு ஒரு அழகான ரோஜாப்பு குட்டி பிறந்தா. அவளுக்கு 'ஜோஷ்னா'NU  பேரு வெச்சு இருக்கோம். )

அந்த லெட்டர் ர திரும்ப சவூதிக்கு அனுப்பி, வேற ஒன்னு வாங்கி....உஸ்ஸ்ஸ்ஸ்..... முடியல..கண்ண  கட்டுதே.  ஒரு வழியா,  விசா ஸ்டாம்ப் பண்ணும் போது, நவம்பர் மாசம் நடுவுல வந்துடுச்சு. அஞ்சு மாசம்!!!!


நான் விசா ஸ்டாம்ப் அடிக்க மும்பைla  20 தேதி வாக்குல இருந்தேன்.  CST STATION கிட்ட தான் ரூம் எடுத்து தங்கி இருந்தேன். நான் கிளம்பி வந்த சில நாட்கள்ல தீவிரவாதிகள் தாக்குதல்.  நம்ம  கசாப் தம்பி  கசாப்பு கடை போட்டாரு. வாழ்க்கைல முதல் முறையா மனச என்னவோ பண்ணுச்சுங்க. All those few days, i used have my dinner on the road side tamilian shops near CST...hot idly &dosai and used to roam in the platform to kill some time! 

 BACK TO THE POINT . ஒரு சுப யோக சுபதினத்தில், அதாவது நவம்பர் 28 ஆம் தேதி AIR ARABIA FLIGHTல   ஷார்ஜா வழியா தம்மாம் (DAMMAM)  நோக்கி கிளம்பியாச்சு.

புலி உறுமுது , புலி உறுமுது , ........வராம் பாரு வேட்டைக்காரன்.........

(சொந்த காசுல சூனியம் வெச்சுக்க சவுதி வரான் வேட்டைக்காரன்!!)

வேட்டை வேகமா தொடரும்.....

Monday, February 8, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - IV

....திரும்பி பார்க்க ?
எங்கோயோ பார்த்த முகம். ஆஹா! நம்ம கூட வேலை பாக்கறவன் மாதிரியே இருக்கானே. ரெண்டு மாசம் முன்னால "SIVAJI" பட ரஜினி கணக்கா மொட்டை தலையோட இருந்தானே. அவனே தான்யா!!!.
"என்ன நல்ல இருக்கீங்களா? எப்படி பண்ணீங்க? என்ன கேட்டாங்க? என்று மூச்சு விடாம கேள்விகளை தெறிக்க, எனக்கோ அவன் பேரு கூட டக்குனு நியாபகம் வரல. (இப்போதைக்கு பேரு வேண்டாம். வேணும்னாஒரு அடையாளத்துக்கு 'மொட்டை'நு வெச்சுக்கலாம். ) நல்ல வேலை. சினிமா தியேட்டர் இடைவேளைல ஒரு வேளை பார்த்தா சில பயலுக "படம் பாக்க வந்து இருக்க போல இருக்கு?"நு கேப்பாங்க. அந்த ஒரு கேள்வி தான் பாக்கி. எனக்கு அவன பத்தி ரொம்பவும் தெரியாது. அவன் RETAIL BANKING DEPT ல இருக்கான். நான் CORPORATE BANKING DEPT ல அதே வங்கியில இருக்கேன். அவ்ளோ தான் பழக்கம். நான் யாருக்கும் தெரியாம எங்கள் தலைவர் வைகோ தமிழ் ஈழத்துக்கு பயணம் போன மாதிரி நான் துபாய்க்கு போயிட்டு வரலாம்னு பார்த்தா, ஆகாது போல இருக்கே. விட்டா BBC செய்திகள்ல வர வெச்சுடுவாங்க போல இருக்கே?
இப்படி நான் மனசுல யோசிச்சுகிட்டே அண்ணன் கேட்ட கேள்விக்கு மேலோட்டமா பதில் சொன்னேன். " ஒன்னும் பெருசா கேக்கலை பாஸ். எல்லாம் நாம பண்ணுற வேலை பத்தி தான் கேட்டாங்க. ALL THE BEST"நு சொன்னேன். "அப்போ உள்ள ஒருமணி நேரம் என்ன பேசினிங்க"நு கேக்க, எனக்கு கடுப்பு எகிறிடிச்சு. "வரவு செலவு கணக்கு பாத்துகிட்டு இருந்தேன்"நு சொல்ல வந்தேன். INTERVIEW க்கு போறவன கடுப்படிக்க வேணாம்னு விட்டுட்டேன்.
டிக்கெட் காசு பத்தி ஏதாவது சொன்னங்கலானு கேனத்தனமா கேட்டு, இருக்குற கடுப்புக்கு கீழ அவன் அடுப்பு பத்தவெக்க, மாம்ஸ் கேப்ல பூந்து "நேரம் ஆகுது, வா போலாம்" முன்னால போக, நான் GREAT எஸ்கேப். தமிழில ஒரு பழமொழி இருக்கே, "வீதி ஓரமா போற ஓணான்ன ........"
" WE WILL REVERT BACK TO YOU IN A COUPLE OF DAYS"நு அவங்க சொன்னது மனசுல ஓடுச்சு. OFFER கெடைச்சா வீட்டுலயும், புதுசா சேர்ந்த BANKகிலும் சமாளிக்கணும். "விடுடா யுவா. எவ்ளவோ பாத்துட்டோம். இத பாத்துக்கமாட்டமனு மனச உற்சாக படுத்திகிட்டே ஹோட்டல்ல விட்டு கிளம்பினோம். அவரோட LR3, SHEIKH ZAYED ROADல அவர் ஆபீஸ் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
மாலை வந்ததும் சூரியனுக்கு மட்டுமா மயக்கம், எனக்கும் தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருந்ததா சரித்திரம் இருக்கா? ஏர்போர்ட் போவதற்கு முந்தி நம்ம நண்பர்களான FOSTERS மற்றும் HEINIKEIN ஆகியோரை பார்த்துட்டு, மாம்ஸ் கிட்ட டாட்டா சொல்லிட்டு EMIRATES விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.
இரண்டு நாள் கழித்து ....... CONT IN PART V

Saturday, February 6, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - III

பிசினஸ் சென்டரை தேடி பிடித்து போன போது ...........

அங்கே யாரும் இல்லை. "The interview starts at nine. You may have to wait please" என்றாள் ஒரு யுவதி. பசி வயிற்றை கிள்ள, ஒரு காபி சாப்பிடலாமா என்று ஒரு வினாடி யோசித்தேன். மறுபடியுமா?????? என்று வடிவேல் போல என் மூளை கதறியது. 2002இல் நான் முதல் முறை இங்கு வந்த போது இப்படி தான் ஸ்டார் பக்ஸ் காபி ஷாப்பில் ஒரு காபி ஆர்டர் செய்தேன். வந்தது 18 திர்ஹம் பில் மற்றும் ஒரு லிட்டர் காபி. 11மணிக்கு ஆரம்பித்த நான் ஒரு மணி வரை (வேறு வழி இல்லை இந்திய பணம் 200 ரூபாய்க்கு மேல தண்டம் அழுதாசே!) குடிச்சேன். சில மணிநேரம் கழித்து பேதி புடிங்கியது தான் மிச்சம். எனவே தான் ஸ்டார் பக்ஸ் போர்டு பார்த்ததுதும் என் மூளை மிரண்டது. வயிறும் லேசா கலங்கிவிடும் போல இருந்தது. எனவே காபி குடிக்கும் என்னத்தை மூட்டை கட்டி விட்டேன்.
8.45 மணிக்கு நேர்முக தேர்வர்கள் வர, நான் 9மணிக்கு உள்ளே பணிக்கப்பட்டேன்.
"மகனே, இன்னைக்கு உன்னை வெச்சு தான் முதல் போனி. நீ என்ன ஆக போறியோ இல்ல அவங்க என்ன ஆக போராங்களோ" நினைத்துகொண்டே உள்ளே சென்றேன். வழக்கம் போல சம்பிரயதாய கேள்விகள் / பதில்கள். நன்றாக போனது. நான் பேசும் போது சில புள்ளி விவரங்களை லட்சம் மற்றும் கோடிகளில் சொல்ல, அவர்களுக்கு புரியவில்லை. Oneman said "please speak in English". எனக்கோ தலை சுற்றியது. அடப்பாவிகளா, கிட்டதிட்ட 45 நிமிஷம் நான் கத்துனது எல்லாம் வீண் தானா??

I SAID " SIR, I AM SPEAKING IN ENGLISH". ??????

நல்ல நேரம், இன்னொருவர் என்னை காப்பாற்றினார். He said "Could you tell the numbers in millions and in US Dollars please?". உஸ்ஸ். கண்ணு கட்டுதே. நல்ல வேலை இவருக்கு கண்டிப்பா நான் பேசினது புரிஞ்சு இருக்கும்னு மனச தேத்திகிட்டேன். எல்லாம் முடிந்து நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். மாம்ஸ் வெய்டிங். "ஏன்டா நீ இன்டர்வியு குடுக்க வந்தியா? எடுக்க வந்தியா? இவ்ளோ நேரம் உள்ள என்ன செஞ்ச?" அவரிடம் கதை சொல்லிக்கொண்டு இருக்கும் போது, கோ-ஆர்டிநெடர் ஓடி வந்தார். "Can you come for a minute please. You are being called" என்ன கிரகம்டா இதுனு நெனச்சிகிட்டு உள்ளே போனேன். சம்பளம் பற்றி விவாதம் நடந்தது. 90% ஓகே என்று மனம் கூச்சச்சளிட்டது. வந்ததுக்கு சாதிச்சுட்டே மகனே!.

"Sorry for calling you again. Thank you for making it all the way from India. You will be called again in case if your shortlisted".

"சரி சரி, கண்டிப்பா நீங்க என்னை கூபிடுவிங்கனு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எங்களைவிட பத்து வருஷம் BANKING LA பின் தங்கி இருக்கீங்க. உங்களுக்கு ஆளு தேவைன்னு" நெனச்சிக்கிட்டே லாபி நோக்கி நடந்தேன்.

பின்னால் இருந்து ஒரு குரல். தமிழில். "யுவராஜ், எப்படி போச்சு?"

CONT IN PART IV.....

Friday, February 5, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - II

காலை 11 மணிக்கு விமானம். நான் 7 மணிக்கே வந்து விட்டேன். 8மணிக்கு CHECK IN ஆரம்பித்தது. கவுன்டரில் இருந்த வடக்கத்தி மங்கை என்னோட கடவுச்சீட்டு (passport), மற்றும் பயண சீட்டு ஆகியவற்றை சரி பார்த்து BOARDING CARD குடுத்தாள். ஒரு வினாடி தான் இருக்கும். "EXCUSE SIR, COULD BE PLEASE GIVE IT BACK FOR A MOMENT SIR?" என்றாள்
இது என்னடா புது தலைவலி என்று யோசித்தேன். நான் திருப்பி குடுத்த போர்டிங் கார்டை அவள் கிழிக்க, எனக்கோ டரியல் ஆனது. ஒரு வேலை FLIGHT FULL என்று குண்டு போடுவாளோ? சில நிமிடம் கழித்து இன்னொரு போர்டிங் கார்டை குடுத்தாள். "SORRY FOR THE INCOVENIENCE SIR. YOUR TICKET HAS BEEN UPGRADED TO COMPLIMENTARY BUSINESS CLASS. WISH YOU A PLEASANT FLIGHT" என்று ஒரு இன்ப அதிர்ச்சி குடுத்தாள்.
மச்சம்டா மாப்ளேய்!!!!. பிசினஸ் கிளாஸ்ல பார்லி டீ சாப்பிட்டு கிட்டே போலாம்னு மனம் குஷி ஆனது.
இம்மிக்ரேஷேன் போனதும் வழக்கம் போல ஏழரை ஆரம்பித்தது. காரணம், என்னோட கடவுச்சீட்டு கோவாவில் நான் வேலை செய்த போது எடுத்தது. PLACE OF ISSUE: PANAJI என்று இருக்கும். என்னை பெத்தவங்க வேற சேட்டு பையன் மாதிரி பேரு வெக்க, நானும் கொஞ்சம் செவப்பா இருந்து தொலைக்க, குடியுரிமை அதிகாரிக்கு நம்ம பாஸ்போர்ட் பாத்தாலே கொஞ்சம் சந்தேகம் தான், "கோவாகாரன்" எதுக்கு சென்னை வந்து international flight பிடிக்கறேன்னு. . இது ஒன்னும் நமக்கு இது புதுசு இல்லையே பாஸ்? எவ்ளவோ பாத்துட்டோம், இது பாக்க மாட்டமா. அங்கே சில நிமிட வாசிப்புகள் / விசாரிப்புகளுக்கு பிறகு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தபட்டேன். என்னோட ஒடிசலான உருவத்தை பார்த்த அதிகாரி, சும்மா ஒப்புக்கு சப்பான் மாதிரி சோதனை போட்டார்.. நாம ஒரு டம்மி பீஸ்நு எப்படியாவது கண்டுபிடிசுடுறாங்க. .
ஒருவழியாக நாலு மணி நேரம் கழித்து துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினதும் மாம்ஸ் தயாராக வந்து இருந்தார். நேராக ஷார்ஜாவில் உள்ள அவர் வீட்டுக்கு போயி ஓய்வு எடுத்துவிட்டு மாலை கும்மி அடிக்க கெளம்பினோம். வழக்கம் போல அஜ்மானில் உள்ள HOLIDAY BEACH கிளப்பில் ROUND TABLE CONFERENCE நடத்தினோம். மூன்று சுற்று முடித்ததும், மாம்ஸ் ஒரு பார்வை பார்த்தார். " மாப்ளை நாளைக்கு நீ இன்டர்வியுக்கு வந்து இருக்க" என்பது போல ஒரு பார்வை.
மறுநாள் காலை 9 மணிக்கு நேர்முக தேர்வு. நள்ளிரவில் தூங்க போனேன். காலை சீக்கிரம் எழுந்து 8 மணிக்கெல்லாம் GRAND HAYATT HOTEL அடைந்தேன். பிசினஸ் சென்டரை தேடி பிடித்து போன போது ...........

CONT IN PART III

நான் சவுதி வந்த (சோக) கதை!!! - பகுதி I

2008 ஏப்ரல் மாதம் ஒரு நாள். நான் ஒரு பன்னாட்டு வங்கியில் திருப்பூரில் பணிபுரிந்த போது என்னோட அலைபேசியில் ஒரு அழைப்பு!

பேசிய அந்த பெண், ஒரு HR CONSULTANT. சவுதி நாட்டில் சில வேலை வாய்புகள் இருப்பதாகவும் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களுடைய RESUME ஒரு பிரதியை தனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வங்கியின் பெயர் SAMBA FINANCIAL GROUP என்று சொன்னார். என்ன கொடுமை சார் எது? . கம்பெனி பேருல "BANK" அப்படிங்கற வார்த்தையே இல்லைங்க. ஏதோ பைனான்ஸ் கம்பெனி பேரு போல இருக்கேன்னு ஒரு பலத்த சந்தேகம். மனுஷனுக்கு பயமா இருகாதா. ஒருவேளை நம்ம பழைய சினேஹம் பைனான்ஸ், ரமேஷ் கார்ஸ் மாதிரி இருந்துட்டா? அதை அந்த பெண்ணிடமே கேட்க, சார், அது பெரிய பேங்க் சார். நீங்க வேணும்னா அவங்களோட வலைதளத்துல போயி பார்த்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திரும்ப இதே எண்ணில் மீண்டும் கூப்பிடுங்க என்று சொன்னார். எனக்கு மிகுந்த அலுவல் இருந்ததால் RESUME மட்டும் மின் அஞ்சல் செய்து விட்டு அந்த வங்கியின் வலை தளத்தை பார்க்க மறந்து விட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அழைப்பு. "SIR, YOUR RESUME IS SHORTLISTED AND YOU NEED TO TRAVEL TO DUBAI FOR THE FINAL INTERIEW. YOU HAVE TO BEAR ALL THE COST AND WILL BE REIMBURSED BY THE BANK SUBSEQUENTLY. CAN WE KNOW, IF YOUR ARE INTERESTED??? என்று ஒரே மூச்சில் பேசி முடிக்க, எனக்கு ஒன்றும் புரிய வில்லை.

காரணம், நான் இந்த பன்னாட்டு வங்கியில் சேர்ந்து மூன்று மாதம் தான் ஆகிறது. எனவே, நான் நாளை கூறுவதாக சொல்லிவிட்டு தொடர்பை (அட! அலைபேசி தொடர்புங்க) துண்டித்தேன். சம்பா வலை தளம் சென்று முதலில் அது ஒரு வங்கி தான், சீட்டு கம்பனி இல்லை (!) என்று உறுதி படுத்திக்கொண்டேன்.

நேர்முக தேர்வு ஞாயிறு அன்று இருந்ததால் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு (வழக்கம் போல் பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு) கிளம்ப திட்டமிட்டேன். அந்த வாரம் எனக்கு சேலம் கிளையில் வேலை இருந்ததால் சேலத்தில் அம்மா வீட்டில் தான் இருந்தேன். உண்மைய சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் சென்னை போறேன் என்று சொல்லிவிட்டு கெளம்பினேன். (நான் சென்னை வழியா தாங்க EMIRATES AIRLINESல டிக்கெட் போட்டு இருந்தேன். அதனால், நான் உண்மை சொல்லிட்டு தான் போனேன். பொய் சொல்லலை....ஹீ..ஹீ..ஹீஎஹீ). பொண்டாட்டிகிட்டேயும் அதே கதை தான். (ஆனாலும் என்னோட CID தங்கை பரணி நான் என்னோட பாஸ்போர்ட் எடுத்து வைத்ததை பார்த்து கண்டு பிடித்ததும், பிறகு சொன்னதும் தனி கதை).

ஷார்ஜாவில் இருந்த என்னோட மாமா சேகரிடம் போன் போட்டு ஏர்போர்ட் வர சொல்லிவிட்டேன். அவரையும் பார்த்து சில ஆண்டுகள் இருக்கும். இப்படி ஒரே கல்லுல பல மாங்காய். வந்தா மலை, போன மயிறு என சென்னை நோக்கி என் பயணம் தொடங்கியது. தெரிஞ்ச முகம் எதுவும் கண்ணில் படகூடாது என்பதற்காக A/C TWO TIERல டிக்கெட் போட்டேன். இல்லாட்டி எதுக்கு சென்னை போறோம்னு விளக்கம் சொல்லியே நாம ஓஞ்சி போக வேண்டி இருக்கும்.

வண்டி சேலம் ஜங்ஷன் விட்டு கிளம்பி சிறிது நேரத்தில் சேலம் டவுன் ஸ்டேஷன் அடைந்தது. எது நடக்க கூடாதுன்னு நான் நெனச்சேனோ அதுவே நடந்தது. WHAT A SURPRISE யுவராஜ்!! என்று ஒரு பரிச்சியமான குரல். சேலம் நரசுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பாலு அவர்கள் எனக்கு அருகே வந்து அமர்ந்தார். என்னோட வங்கியின் பெரிய வாடிக்கையாளர். எனக்கும் அவருக்கும் அருகருகே இருக்கைகள். சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க போனோம். காலையில் அவரே எழுப்பி விட்டார். "சென்னைல எங்க போறீங்க யுவராஜ், சொல்லுங்க. I CAN DROP U "என்றார். ஆஹா, இது என்னடா வம்பு என்று இதையும் சமாளித்து ஆட்டோ பிடித்து AIRPORT வந்து சேர்ந்தேன்.
EMIRATES AIRLINES கவுன்டரில் CHECK IN செய்த பொது ...................
CONT IN PART II

என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.....

வணக்கம் அன்பர்களே!...

யார் யாரோ ப்ளாக்ல கிறுக்குறாங்க, கலாய்க்கறாங்க...கொஞ்சம் என்னோட பங்குக்கு நானும் ஒரு கை பாக்குறேன். நான் தற்போது சவுதி அரேபியாவில் ஒரு வங்கி அதிகாரியா வேலை செய்யுறேன். வந்து கிட்டத்தட்ட 15மாசம் ஆகுது. இந்த நாட்டுல ஆணி புடுங்கினது போதும்னு தோணுது. இன்னும் சில மாதங்கள்ள ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணியாச்சு. என்னோட இந்த அனுபவங்களை ஆ முதல் அக்கு வரை என்னால் முடிஞ்ச நகைச்சுவை நடைல இங்க பகிர்ந்துக்க போறேன்.
நமக்கு இந்த அட்வைஸ் பண்ணறது, செண்டிமெண்ட்ஆக உருகி கவிதை சொல்லுறது எல்லாம் இங்க வேலைக்கு ஆகாதுன்னு நல்லா தெரியும்.

படிங்க, சிரிங்க, சந்தோஷமா இருங்க...

அன்புடன்........யுவராஜ்.