Monday, February 8, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - IV

....திரும்பி பார்க்க ?
எங்கோயோ பார்த்த முகம். ஆஹா! நம்ம கூட வேலை பாக்கறவன் மாதிரியே இருக்கானே. ரெண்டு மாசம் முன்னால "SIVAJI" பட ரஜினி கணக்கா மொட்டை தலையோட இருந்தானே. அவனே தான்யா!!!.
"என்ன நல்ல இருக்கீங்களா? எப்படி பண்ணீங்க? என்ன கேட்டாங்க? என்று மூச்சு விடாம கேள்விகளை தெறிக்க, எனக்கோ அவன் பேரு கூட டக்குனு நியாபகம் வரல. (இப்போதைக்கு பேரு வேண்டாம். வேணும்னாஒரு அடையாளத்துக்கு 'மொட்டை'நு வெச்சுக்கலாம். ) நல்ல வேலை. சினிமா தியேட்டர் இடைவேளைல ஒரு வேளை பார்த்தா சில பயலுக "படம் பாக்க வந்து இருக்க போல இருக்கு?"நு கேப்பாங்க. அந்த ஒரு கேள்வி தான் பாக்கி. எனக்கு அவன பத்தி ரொம்பவும் தெரியாது. அவன் RETAIL BANKING DEPT ல இருக்கான். நான் CORPORATE BANKING DEPT ல அதே வங்கியில இருக்கேன். அவ்ளோ தான் பழக்கம். நான் யாருக்கும் தெரியாம எங்கள் தலைவர் வைகோ தமிழ் ஈழத்துக்கு பயணம் போன மாதிரி நான் துபாய்க்கு போயிட்டு வரலாம்னு பார்த்தா, ஆகாது போல இருக்கே. விட்டா BBC செய்திகள்ல வர வெச்சுடுவாங்க போல இருக்கே?
இப்படி நான் மனசுல யோசிச்சுகிட்டே அண்ணன் கேட்ட கேள்விக்கு மேலோட்டமா பதில் சொன்னேன். " ஒன்னும் பெருசா கேக்கலை பாஸ். எல்லாம் நாம பண்ணுற வேலை பத்தி தான் கேட்டாங்க. ALL THE BEST"நு சொன்னேன். "அப்போ உள்ள ஒருமணி நேரம் என்ன பேசினிங்க"நு கேக்க, எனக்கு கடுப்பு எகிறிடிச்சு. "வரவு செலவு கணக்கு பாத்துகிட்டு இருந்தேன்"நு சொல்ல வந்தேன். INTERVIEW க்கு போறவன கடுப்படிக்க வேணாம்னு விட்டுட்டேன்.
டிக்கெட் காசு பத்தி ஏதாவது சொன்னங்கலானு கேனத்தனமா கேட்டு, இருக்குற கடுப்புக்கு கீழ அவன் அடுப்பு பத்தவெக்க, மாம்ஸ் கேப்ல பூந்து "நேரம் ஆகுது, வா போலாம்" முன்னால போக, நான் GREAT எஸ்கேப். தமிழில ஒரு பழமொழி இருக்கே, "வீதி ஓரமா போற ஓணான்ன ........"
" WE WILL REVERT BACK TO YOU IN A COUPLE OF DAYS"நு அவங்க சொன்னது மனசுல ஓடுச்சு. OFFER கெடைச்சா வீட்டுலயும், புதுசா சேர்ந்த BANKகிலும் சமாளிக்கணும். "விடுடா யுவா. எவ்ளவோ பாத்துட்டோம். இத பாத்துக்கமாட்டமனு மனச உற்சாக படுத்திகிட்டே ஹோட்டல்ல விட்டு கிளம்பினோம். அவரோட LR3, SHEIKH ZAYED ROADல அவர் ஆபீஸ் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
மாலை வந்ததும் சூரியனுக்கு மட்டுமா மயக்கம், எனக்கும் தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருந்ததா சரித்திரம் இருக்கா? ஏர்போர்ட் போவதற்கு முந்தி நம்ம நண்பர்களான FOSTERS மற்றும் HEINIKEIN ஆகியோரை பார்த்துட்டு, மாம்ஸ் கிட்ட டாட்டா சொல்லிட்டு EMIRATES விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.
இரண்டு நாள் கழித்து ....... CONT IN PART V

23 comments:

Gita said...

Hi thanks for the blog...you have a nice blog...good read overall.

YUVARAJ S said...

Thank you Gita. Keep blogging.

Narayanan said...

Brought their banks at par to us???? Come home man - we are in need of you!

YUVARAJ S said...

Adhellam onnum illai pa. Just pothumnu thonudhu. So, i am back to India. Notice period is six months.....damn thing!

rohinisiva said...

பட்டைய கிளப்புது !

அண்ணாமலையான் said...

நெறய சீரியல் பாப்பீங்களோ? கரெக்டான இடத்துல தொடரும் போடறீங்க?

YUVARAJ S said...

ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "SERIAL".

எனக்குள்ள இருக்குற ஒரு கலைஞன் தான வெளிய வரான் தலைவா...கண்டுக்காதீங்க!

Chitra said...

ினிமா தியேட்டர் இடைவேளைல ஒரு வேளை பார்த்தா சில பயலுக "படம் பாக்க வந்து இருக்க போல இருக்கு?"நு கேப்பாங்க. அந்த ஒரு கேள்வி தான் பாக்கி.

.........................ha,ha,ha,......நகைச்சுவையில் பின்னிட்டீங்க.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா, கமெண்ட்மாட்ரேஷனை எடுத்துடலாமே!! அது இருந்த நிறையபேர் பின்னூட்டம் போடாமலேயே போயிருவாங்க :)

பாலாஜி said...

நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது

YUVARAJ S said...

Nandri Chitra, Abdullah Anna and Balaji.

Konja naal pogattum Abdullah Anna. Comment moderation eduthudulam.

Keep reading.

இராகவன் நைஜிரியா said...

கலக்கறீங்க யுவா.

கீப் இட் அப்.

இராகவன் நைஜிரியா said...

ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்த்துடுங்க. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இருந்தால், நீங்க இடுகைப் போட்ட உடனே என் டாஷ் போர்டில் தெரியும். வசதியாகவும் இருக்கும்.

YUVARAJ S said...

nandri raghavan anna. thondarndhu ookkam kudunga. ungal pathivugalaiyum naan pin thodargiren.

YUVARAJ S said...

raghavan anna, i am unable to load followers widget. could you guide me on how to activate it. If possible, please mail me at: yuvaraj.s.rajan@gmail.com....thanks a ton.

இராகவன் நைஜிரியா said...

ஃபாலோயர் விட்ஜெட் பிரச்சனை பலருக்கும் இருக்குங்க. ஏன் என்றுத் தெரியவில்லை. இது பற்றி தம்பி ஜமாலுக்கு (கற்போம் வாருங்கள் வலைப்பதிவர்) தெரியும் என நினைக்கின்றேன்.

நாளைக்கு கேட்டுச் சொல்லுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_7864.html

மேலே கொடுத்துள்ள இடுகையைப் படிச்சு பாருங்க... உங்களுக்கு தேவையான தீர்ப்பு கிடைக்கும்.

Aarthi RamaBharathy said...

Hello Mr.Yuvaraj,

Thanks 4 ur comments..so kind of u to appreciate my blog.i found urs interesting too .

YUVARAJ S said...

Thanks ragavan anna. i could able to add the FOLLOWERS WIDGET. Also, help me on how to add the LIVE TRAFFIC FEED pl.

Priya said...

ரொம்ப நல்லா தொடர்கதை எழுதுறீங்க!

இராகவன் நைஜிரியா said...

கண்டு பிடிச்சுத்தான் சொல்லணும்... கண்டுபிடிப்போம்... கொஞ்சம் டைம் கொடுங்க.

Vijayashankar said...

Very nice! Continue ....

( I am from Tiruppur live in Bangalore now )

Anonymous said...

I apologise, but, in my opinion, you are not right. I am assured. I can defend the position. Write to me in PM, we will communicate.