Monday, June 14, 2010

சுவாரஸ்ய சம்பவங்கள் ரெண்டு.....

சம்பவம் 1 :

இன்று நானும்  என்னோட சக அலுவலரும் (அவன் ஓர் சவுதி) ஒரு விஷயமாக வெளிய போக வேண்டி இருந்தது. நான் அவனை ஒரு பத்து நிமிடம் கழித்து கார் பார்கிங்க்கு வர சொல்லி விட்டு மறந்துவிட்டேன். தவறு முழுக்க என்னோடது தான்.

 என்னோட மொபைலில் அழைப்பு: RAJ WHERE ARE YOU? MAJD HERE. PLEASE COME BARKING. VERY HOT...VUF..VUF...COME FAST

மணி 11 . 40 . சும்மா சுட்டு எரிக்கும் வெயில். பாவம் அவன்.  எனக்கு என்மேலே எரிச்சல் வந்தது. அதோடு அவன் பேசிய இங்கிலீஷ் வேறு செம டார்ச்சர்.  அந்த கடுப்பிலும் என் குரங்கு மனம் காமடி பண்ணியது. அவன் சொன்ன மாதிரியே நாய் போல ஊளையிட்டுகிட்டு  அவன் முன் நின்னால் எப்படி இருக்கும்???  அவன் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்?? என்று  நினைக்கும் போதே கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு வந்தது. (YOU ONLY TOLD ME....PLEASE COME BARKING.!!!)
I AM WAITING SUN. YOU LAUGHING? இது அவன். SORRY MAN. HAD  GOT A GUD SMS STUFF, JUST READ AND LAUGHING என்று சமாளித்து கிளம்பினோம்.

குறிப்பு: அரபியில் 'P' உச்சரிப்பில் எந்த எழுதும் கிடையாது. எனவே அவர்கள் 'P' என்பதை "B" என்று சொல்லுவார்கள். B(P)ARKING, B(P)ANDA, B(P)ROGRESS, B(P)AYMENT..
உச்ச கடுப்பில் இருந்த அவன் (கடும் வெய்யில் பாவம்), அவனுடைய உச்சரிப்பால் என் விலா எலும்பை நோகடித்து விட்டான்

சம்பவம் 2 :

மதியம் NERIYA வேலை இருந்ததால் உணவை தியாகம் பண்ண வேண்டி இருந்தது. 15ஆம் திகதிக்குள் PROPOSAL  SUBMIT பண்ணியாகணும். (லவ் ப்ரோபோசல் இல்லேங்க, கிரெடிட் ப்ரோபோசல்). நாங்கள் இருப்பது என்னவோ REGIONAL OFFICE , பேருக்குதான். ஆனால் கான்டீன் எதுவும் இல்லை. அலுகலகமோ ஊருக்கு வெளியே. பக்கத்துல இருந்த பகாலாவுல (MINI  STORE ) கொஞ்சம் JUNK வாங்கி திரும்பினேன்.  லிப்ட்இல்  ரெண்டு  சவுதி இளைஞர்கள்   தென்பட்டார்கள்.

சவுதி: சலாம் வாலேக்கும்.
நான்: வாலேக்கும் சலாம்...
சவுதி:  ARE YOU FROM INDIA?
நான்: YAA ..
சவுதி: (கட்டை விரலை உயர்த்தி) VALLAH, GOOD. YOU KNOW I AM GOING BANGALORE. GOING TO STUDY MASTERS IN  COMPUTER SCIENCE. THEN I WILL GET TRAINING IN WIPRO. INDIA IS GREAT
நான்: GUD CONGRATS.

மிகவும் சந்தோஷமாக காணப்பட்டான். பின்னர் ஒரு பேப்பர காட்டினான். அது BANK GUARANTEE  க்காண விண்ணப்பம். VISA FORMALITY க்கு என்று நினைகிறேன். இரண்டாம் தளத்தில் இறங்கும் போது.....HURREY, I LOVE INDIA....என்று அவன் கத்த, எனக்கு என்னோட நாட்டை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு சில வினாடிக்கு தலைக்கனம் எட்டி பார்த்தது. அவனை பார்த்து 'ஜெய் ஹிந்த்' என்று கூறி விடை பெற்றேன். அவனுக்கு புரிந்து இருக்குமா? தெரியவில்லை. பெங்களூர் போனதும் ஒருவேளை புரிந்து கொள்வான்.

2 comments:

அஷீதா said...

RAJ WHERE ARE YOU? MAJD HERE. PLEASE COME BARKING. VERY HOT...VUF..VUF...COME FAST //

நல்லா சிரித்தேன் :)))

//அரபியில் 'P' உச்சரிப்பில் எந்த எழுதும் கிடையாது. எனவே அவர்கள் 'P' என்பதை "B" என்று சொல்லுவார்கள். B(P)ARKING, B(P)ANDA, B(P)ROGRESS, B(P)AYMENT..//

இன்று நான் தெரிந்துக்கொண்ட புதிய தகவல். நன்றி.

YUVARAJ S said...

@ அஷிதா

நன்றி. மேலும் பல புதிக தகவல்களுடன் சந்திப்போம்