Wednesday, June 23, 2010

மயில் கோழியான கதை!!!

இன்று மதியம் உணவு அருந்த நானும் நண்பர் குமாரும் மதீனா உணவு விடுதிக்கு போன பொழுது நடந்தது இது.

சாப்பிட்டு விட்டு பணம் குடுக்க போனபோது வழக்கம் போல நம்ம முபாரக் பாய் எவனடா வம்பு இழுக்கலாம் என்று கல்லாவில் காத்துக்கொண்டு இருந்தார்.

நண்பர் குமார் புதிதாக வந்ததால், அவரை பார்த்து," சார் புதுசா இருக்கீங்க, நமக்கு எந்த ஊரு" என்று கேட்டார்.

"முதல்ல உம்மோட ஊற சொல்லும் வோய்" 

"நமக்கு மயிலாடுதுறை சார்"

வூடு கட்ட களம் அமைச்சு குடுத்தாச்சு. நாம சும்மா இருப்போமா??

" பாய், ஒரு சின்ன சந்தேகம், உங்க ஊருல நெறிய மயில் ஆடுமா? பேரு அமர்களமா மயில் ஆடும் துறைன்னு  இருக்கே???"

" ஆமாங்க, எங்க ஊரு அவ்ளோ சிறப்பான ஊரு"

" பாய், ஆடுறது எல்லாம் ஆம்பளை மயிலா இல்ல பொம்பள மயிலா?"

(பெண் மயிலுக்கு தோகை இல்லை, ஆண் மயிலுக்கு தான் தோகை உண்டு. அவர் பெண் மயில் என்று சொல்லி வாயாக்குடுதால் மடக்கலாம் என்று பிளான்)

" எந்த மயில் ஆடுனா என்ன? அது ரெண்டு காலுல ஆடப்போவுது" என்று முபாரக் சமாளிக்க பார்க்க.....

விடுவோமா நாங்க!!!

" ஹலோ, பாய், தோகை விரிச்சு ஆடுன அதுக்கு பேரு மயில். இல்லாட்டி அது ஒரு வளந்த,  பெரிய கோழி. ஸோ, இனிமே உங்க ஊரு பேரு கோழியாடும்துறை. யாரவது ஊரு பேரு கேட்டா, இப்படியே maintain பண்ணுங்க.  வரட்டா.....என்று பில் செட்டில் பண்ணி நடையை கட்டினோம்.

பின்னால் பாயின் குரல் கேட்டது. " இவங்க வெறிய தீத்துக்க இன்னைக்கு நாம தான் சிக்கினோம் போல!!!!!!!"

நாங்கெல்லாம் தீப்பொறி திருமுகத்தையே ரத்த திருமுகம் ஆகுனவுங்க......

11 comments:

அஷீதா said...

நாங்கெல்லாம் தீப்பொறி திருமுகத்தையே ரத்த திருமுகம் ஆகுனவுங்க...... //

நல்லாவே சிரிச்சேன் :))

அஷீதா said...

" எந்த மயில் ஆடுனா என்ன? அது ரெண்டு காலுல ஆடப்போவுது" என்று முபாரக் சமாளிக்க பார்க்க.....//


எப்படி தான் இப்படி புச்சு புச்சாஆஆஆ கண்டுப்பிடிக்கிராங்களோ :))))

YUVARAJ S said...

//எப்படி தான் இப்படி புச்சு புச்சாஆஆஆ கண்டுப்பிடிக்கிராங்களோ :)))) ///

எதுலையுமே ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை வேணும்ங்க.

YUVARAJ S said...

//எப்படி தான் இப்படி புச்சு புச்சாஆஆஆ கண்டுப்பிடிக்கிராங்களோ :)))) ///

எதுலையுமே ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை வேணும்ங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க ஊருப்பேரை இப்படி காமெடி செய்திருக்கீங்களா நீங்க.. ஓஹோ..

YUVARAJ S said...

@ முத்துலெட்சுமி

வருகைக்கு நன்றி மேடம்.
கோயமுத்தூர் குசும்புணா சும்மாவா?

iTTiAM said...

hmmm..!!!

சாரே...

கோய முத் தூர் னா என்ன?
அங்க நெறைய தூர் இருக்குமா?

ஸ்ரீ

YUVARAJ S said...

வாங்க ஸ்ரீ,

வருகைக்கு நன்றி. ஊரு பேர நல்ல முழுசா படிங்க.

கோயமுத்தூர் ...... 'கோய' என்றால் "நிறைய" என்று பொருள் படும்படி ஒரு வார்த்தை சங்க இலக்கியத்தில் இருந்துள்ளது. தூர் வாரினால் நிறைய முத்துக்கள் கிடைக்கும் ஊர் என்பதாலேயே அதை கோயமுத்தூர் என்று அழைகின்றனர். தொல்காப்பியத்தில் பகுதி ௪, அதிகாரம் ௭, அத்தியாயம் ௩ பிரித்து பார்த்தீர்கள் என்றால்.....

"ஹலோ, ஹலோ...எங்க ஓடுறீங்க ....

Anonymous said...

அடங்க,புல் தடுக்கி பயில்வான் போல இருந்திகிட்டு, குசுமபு ஓவருங்கண்ணா,நானும் கோயமுத்துருதானுங்கண்ணோய்.

Aarthi RamaBharathy said...

Hello!!

I'm happy that your Life is Beautiful with lot of smiles...n so your blog:)Thanks for your Invitation Anna:)

YUVARAJ S said...

@ ஆர்த்தி

வாங்க சகோ. தொடர்ந்து படிங்க.