Tuesday, June 15, 2010

இப்படியும் காலன் வருவானா?





இரண்டு நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடந்த துயர சம்பவம்.

பிதா ஹரிஸ் (FIDA HARRIS) ஐந்து வயது நிரம்பிய அழகான குழந்தை. கடந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு சென்று வந்து இருந்தாள். விதி எந்த ரூபத்தில் காலனை வரவைப்பான் என்று தெரியாமல் ஜூன் 13ம் தேதி பள்ளிக்கு கிளம்பினாள். ஆனால் திரும்பவில்லை. ஏன் தெரியுமா? பள்ளிக்கு சென்ற பிதா, தான் சென்ற வேனிலே தூங்கிவிட, அறிவு கெட்ட டிரைவர் அதை பார்க்காமல் வண்டியை பூட்டி விட்டு போய் விட்டான். பொதுவாக இந்த வேன்கள் ஆள் அரவமற்ற பிரேதேசத்தில் தான் நிறுதப்ப்படுமாம். இங்கு வெய்யில் 50 டிகிரி தாண்டுவது சரவ சாதாரணம். அலட்சியத்தின் விளைவு, மூச்சு விட முடியாமல், உதவிக்கு யாரும் இல்லாமல், வெப்பத்தில் அவதிப்பட்டு, ஒரு குழந்தையின் மரணம்.

விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.

http://arabnews.com/saudiarabia/article65581.ece

அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அக்குழந்தையை பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கும், உற்றோருக்கும் கடவுள் மன தைரியத்தை தந்து துணை இருப்பாராக.

3 comments:

அஷீதா said...

என்ன கொடுமை :( ரொம்ப ஆர்வமா உங்க பதிவு படிக்கலாம்ன்னு வந்து இந்த பதிவு படித்தவுடன் மனசு கனத்துடுச்சு. ஹ்ம்ம் ஒரு நிமிஷம் அப்படியே ஆடி போயிட்டேன்.

YUVARAJ S said...

அந்த குழந்தை ஆன்மா ஷாந்தி அடைய பிரார்த்தனை செய்யுங்கள்.

ஜோதிஜி said...

பிரார்த்தனைகள்.