Tuesday, June 15, 2010

சோதனை மேல் சோதனை...

மீண்டும் சவுதி கதை கேக்கலாமா........

ஜோதிஜி என்னனு நீங்க கேளுங்களேன்? செந்தில் அண்ணே நீங்களாவது கேளுங்களேன்? அஷீதா அட்லீஸ்ட் நீங்க? விஜய் அண்ணா, ராகவன் அண்ணா, நீங்க யாரும் கேக்காட்டி நான் சொல்லாம விட்டுடவுனா என்ன............

28 / 11  / 2008 அன்று கோவைக்கு பை பை சொல்லி, air arabia புடிச்சு ஷர்ஜாஹ் கிளம்பியாச்சு.  சவுதியில் ஜல்லி அடிக்கும் வாய்ப்பு எதுவும் இல்லாததால், கடைசியா ஒரு முறை ஷார்ஜாவில் 'தாக ஷாந்தி' முடித்துவிட்டு  ( பீராய நமக, பேக் பைப்பராய   நமக) தம்மாம் வந்து எறங்கினேன்.

8 . 3 0 க்கு குடியுரிமை சோதனைக்கு நின்று மூணு மணிநேரம் (தெனற தெனற ....ஆவ்வ்வ்வ்) கழித்து வெளி வந்தேன். இது போல் ஒரு மட்டமான அனுபவம்  இருந்தது இல்லை. வந்து இறங்கியதே ஒரே ஒரு விமானம். மொத்தம் சுமார் 150 பேர். இருந்ததோ பத்து கவுண்டர். அதில் ஒருவரும் இல்லை. முதலில் பெண்கள் அனைவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்தார்கள். (மவனே, நம்மள மூணு மணி நேரம்  'டர்' ஆகிட்டு, இனி என்ன 'இர்ர்'...) நிக்க வேச்சாணுக. ஆண்கள ரெண்டு வரிசையா நிக்க வேச்சாணுக. அரபி டிரஸ் போட்டவன் எல்லாம் அஞ்சு நிமிஷத்துல போயிட்டான். மீதி இருந்தவன் எல்லாம் EXPAT  தான். ஒரு கப்பி தலையன் வந்து ஒவ்வொரு பாஸ்போர்ட்டா பார்த்தான். ஒரு சிலரை மட்டும் தனி வரிசையில் நிக்க வெச்சான். இடையிலே சூட் போட்டு இருந்த ஒரு வெள்ளைக்கார மவராசன கூப்பிட்டு அனுப்பினான். இப்படி வரிசை மாறி பந்தாடி ஒரு வழியா வெளிய வந்தேன்.  அட்லீஸ்ட் FULL FORMALSல வந்து இருந்தா ஒருவேளை மதிச்சி இருப்பானோ என்னவோ. பக்கி மாதிரி பழைய ஜீன்சும் பரட்டை தலையும் பாத்து லேபர்னு நெனச்சு இருப்பான்.

நமக்கு எப்போ 7 . 50  F . M . (அதாங்க ஏழரை) தனியா வந்து டியூன் போட்டு இருக்கு?   வழக்கம்  போல  நாலாந்து  வாத்தியக்கரங்களை  கூட்டிகிட்டு வந்து... அப்பப்ப.....போதும்டா சாமீ.

நல்ல வேலை, நம்ம டிரைவர் அண்ணன் ஒன்னும் சொதப்பலை. கரெக்ட்டா  சும்மா கன் மாதிரி வந்து விட்டு இருந்தார். அவட வந்தது நம்ம கேரளத்து  சேட்டன் அல்லோ...ஒரு கொழப்பமும் இல்லா.

30 நாட்களுக்கு மங்களம் பாட ஹோட்டல் லீ மெரிடியன்ல ரூம் போட்டு இருந்தார்கள். நன்றாக தூங்கிவிட்டு, மறுநாள் எழுந்து உற்சாகமாய் கிளம்பினேன். முதல் அனுபவம், அதுவும் சவுதி போன்ற ஒரு நாட்டுல....நிறைய கேள்விகள், மனதுக்குள்....

01 .12 .2008 .
எங்களோட DIVISION HEAD  (DH)  விடுமுறையில் இருந்ததால் ACTING DH அவர்களை சந்தித்து பணியில் சேர்ந்தேன். எங்களுடைய உரையாடல் INDIAN BANKING SYSTEM  பற்றி நன்றாக போய்க்கொண்டு இருந்தது கொஞ்ச நேரத்துல:
"RAJ, WHEN DID U ARIVE FROM INDIA EXACTLY, WAS IT YESTERDAY'? என்று கேட்டார்.

இதுல என்னடா வில்லங்கம், ஒரு வேலை அஷ்டமி, நவமி பாக்குராரோ என்று யோசினை செய்து கொண்டே "YES SIR' என்றேன்.

" IN THIS CASE, YOU HAVE JUST ARRIVED WITH AN ENTRY VISA. SORRY RAJ, BAD LUCK TO YOU"

வந்த வேகதுலையே ரிவிட்டா? ஐயோ......ஆப்பு எனக்கு வெச்சாங்களா, இல்ல நானே ஆப்ப தேடி போயி அது மேல ஜம்முனு உட்க்காந்துகிட்டனா.......தெரியலையே....

என்னனு சொல்லவா.....

இப்போ வரேன் ....நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.......

2 comments:

அஷீதா said...

(மவனே, நம்மள மூணு மணி நேரம் 'டர்' ஆகிட்டு, இனி என்ன 'இர்ர்'...) நிக்க வேச்சாணுக. //

நல்ல டைமிங் :))


பக்கி மாதிரி பழைய ஜீன்சும் பரட்டை தலையும் பாத்து லேபர்னு நெனச்சு இருப்பான்.

ஃஃபார்மல்ஸ் போட்டா மட்டும் ஹ ஹ ஹ

வந்த வேகதுலையே ரிவிட்டா? ஐயோ......ஆப்பு எனக்கு வெச்சாங்களா, இல்ல நானே ஆப்ப தேடி போயி அது மேல ஜம்முனு உட்க்காந்துகிட்டனா.......தெரியலையே....//

கவுத்திட்டிங்களே பாஸ். கடைசி வரை ஆப்பு என்னன்னு சொல்லவே இல்லையே :(

YUVARAJ S said...

@ அஷிதா

கூடிய விரைவில் அந்த கொடுமைய சொல்லுறேன். படிங்க.