Monday, February 15, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - V

இங்க ஒன்னும் பெருசா suspense   இல்லை.

ஏன்னா, கண்டிப்பா offer வந்து இருக்கும்னு சொல்ல வேண்டியது இல்லை.  (அப்புறம் எப்படி நான் இந்த ஊருக்கு வந்து இருப்பேன்??? ) ABDULAZIZ AL-MADI கூப்பிட்டு நான் தேர்வு செய்யப்பட்ட விஷயத்த சொன்னார்.  இனி மேற்கொண்டு என்னை முதலில் கூப்பிட்ட HR consultantடை காண்டாக்ட் பண்ண சொன்னார்.  அவனை கூப்பிட்டா, அவன் சொன்னத கேட்டு மயக்கம் வராத குறை தான்.

கொஞ்சமா சொன்னான்:
௧. முதலில் என்னோட MBA certificateடை மாநில அரசிடம் அத்தாட்சி பெறணும். (அண்ணாமலை பல்கலைகழகம், சிதம்பரம் மற்றும் தலைமை செயலகம், சென்னை)
௨. அப்புறம் மத்திய அரசிடம் (மனிதவள மேம்பாட்டு துறை) அத்தாட்சி பெறணும். (டெல்லி)
௩.  அப்புறம் சவுதி தூதரகத்திடம்  அத்தாட்சி பெறணும். (டெல்லி)
௪.  அப்புறம் மருத்துவ பரிசோதனை. (மும்பை)
௫.  அப்புறம் சவுதி தூதுரகத்தோட நேர்முக தேர்வு,
௬. அப்புறம் விசா அடிக்கப்படும் 

இப்படி நிறைய அப்புறம்! அப்புறம்!.........

கிறுக்குத்தனமா நிறைய  நடைமுறைகள்.  அதுல ஒரு காமெடி கேளுங்க.  மருத்தவ பரிசோதனை பாஸ்போர்ட் வழங்கப்பட்ட மாநிலத்துல தான் பண்ணனுமாம்.  இல்லாட்டி மும்பைல தான் பண்ணனுமாம்.  எல்லாரும் கோவாவுக்கு டூர் போவாங்க. நான் மெடிகல் டெஸ்ட் எடுக்க போகனுமா? என்ன கொடுமை சார்?  உலகத்துல இந்த வேதனை என்னோட எதிரிக்கு கூட வர கூடாது.

பிள்ளையார் சுழி  போட்டு, மேற்கொண்ட கிரகத்த எல்லாம் ஒவ்வொன்ன ஆரம்பிச்ச போது, சம்பா பாங்க்ல இருந்து ஒரு குரியர்  வந்தது. எல்லாம் கிரகமும்  அரபிக்ல இருந்தது. ஒரே ஒரு லெட்டர் மட்டும் ஆங்கிலத்துல.  ஆஹா! சந்தோஷமா, நம்பி படிக்க ஆரம்பிச்சேன்.  THE LETTER IS ADDRESSED TO ROYAL SAUDI EMBASSY, KARACHI, PAKISTAN REQUESTING FOR MY VISA STAMPING. அட ஞான சூனியங்களா, லெட்டர் அடிக்கும் போது கவனிக்க மாடீன்களா? சவுதி விசா ஸ்டாம்ப் பண்ண நான் பாகிஸ்தான் போகனுமா? அதுக்கு இன்னொரு விசா வாங்கனுமா?  என்ன எழவுடா இது? விசா ஸ்டாம்ப் அடிக்கறதுக்குள்ள நான் காலியாயிடுவேன் போல இருக்கே? இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள இவ்ளோ  ரகளையா?


(இதற்கிடையில், கடவுள் அருளால், நவம்பர் ஆறாம் தேதி எங்களுக்கு ஒரு அழகான ரோஜாப்பு குட்டி பிறந்தா. அவளுக்கு 'ஜோஷ்னா'NU  பேரு வெச்சு இருக்கோம். )

அந்த லெட்டர் ர திரும்ப சவூதிக்கு அனுப்பி, வேற ஒன்னு வாங்கி....உஸ்ஸ்ஸ்ஸ்..... முடியல..கண்ண  கட்டுதே.  ஒரு வழியா,  விசா ஸ்டாம்ப் பண்ணும் போது, நவம்பர் மாசம் நடுவுல வந்துடுச்சு. அஞ்சு மாசம்!!!!


நான் விசா ஸ்டாம்ப் அடிக்க மும்பைla  20 தேதி வாக்குல இருந்தேன்.  CST STATION கிட்ட தான் ரூம் எடுத்து தங்கி இருந்தேன். நான் கிளம்பி வந்த சில நாட்கள்ல தீவிரவாதிகள் தாக்குதல்.  நம்ம  கசாப் தம்பி  கசாப்பு கடை போட்டாரு. வாழ்க்கைல முதல் முறையா மனச என்னவோ பண்ணுச்சுங்க. All those few days, i used have my dinner on the road side tamilian shops near CST...hot idly &dosai and used to roam in the platform to kill some time! 

 BACK TO THE POINT . ஒரு சுப யோக சுபதினத்தில், அதாவது நவம்பர் 28 ஆம் தேதி AIR ARABIA FLIGHTல   ஷார்ஜா வழியா தம்மாம் (DAMMAM)  நோக்கி கிளம்பியாச்சு.

புலி உறுமுது , புலி உறுமுது , ........வராம் பாரு வேட்டைக்காரன்.........

(சொந்த காசுல சூனியம் வெச்சுக்க சவுதி வரான் வேட்டைக்காரன்!!)

வேட்டை வேகமா தொடரும்.....

5 comments:

ரோகிணிசிவா said...

உங்கள் வரவு நல்வரவாக!அப்போ இப்போ குட்டிக்கு ஒரு வயசு ஆயிருக்கும்!அவளுக்கு என் வாழ்த்துக்கள்!

Vijayashankar said...

மிக அருமையாக இருக்கு. இன்டியாவுக்கு சம்பளம் எத்தனை டைம்ஸ்? ( :-) ) என் மாமா ரியாதில் இருபத்தி எட்டு வருடம் இருந்தார். வருடம் லிவில் அருபது நாட்கள ஊருக்கு வருவார். அத்தை கடைசி 3 வருடம் தான் இருந்தார். இப்போ டுபாயில்.

YUVARAJ S said...

Thank you rohini for your wishes!

Anna Vijayashankar, if i were here in KSA for 28 years, my god, i cannot imagine my status. I dont care for money. If money had been my priority, i would have preferred to stay back.

There are certain things which money cannot buy. USE MASTER CARD (Master card advt anne)

R.Gopi said...

Yuva....

Its really funny... I just finished reading all the parts at a stretch.... Waiting for the next part....

Keep KALAKKING......

Do visit my blogs when u r free...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

My reflections said...

ஏன் சார் ரொம்ப நாளா உங்க வலைப்பூவில எதுவும் எழுதாம வெச்சிருகீங்க...
உங்கள் கதை ரொம்ப நல்லா இருக்கு...
சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதீடுங்க...
பாப்பாவுக்கு சுத்தி போடுங்க... கண்ணு பட்டுட போகுது...