Friday, February 5, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை!!! - பகுதி I

2008 ஏப்ரல் மாதம் ஒரு நாள். நான் ஒரு பன்னாட்டு வங்கியில் திருப்பூரில் பணிபுரிந்த போது என்னோட அலைபேசியில் ஒரு அழைப்பு!

பேசிய அந்த பெண், ஒரு HR CONSULTANT. சவுதி நாட்டில் சில வேலை வாய்புகள் இருப்பதாகவும் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களுடைய RESUME ஒரு பிரதியை தனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வங்கியின் பெயர் SAMBA FINANCIAL GROUP என்று சொன்னார். என்ன கொடுமை சார் எது? . கம்பெனி பேருல "BANK" அப்படிங்கற வார்த்தையே இல்லைங்க. ஏதோ பைனான்ஸ் கம்பெனி பேரு போல இருக்கேன்னு ஒரு பலத்த சந்தேகம். மனுஷனுக்கு பயமா இருகாதா. ஒருவேளை நம்ம பழைய சினேஹம் பைனான்ஸ், ரமேஷ் கார்ஸ் மாதிரி இருந்துட்டா? அதை அந்த பெண்ணிடமே கேட்க, சார், அது பெரிய பேங்க் சார். நீங்க வேணும்னா அவங்களோட வலைதளத்துல போயி பார்த்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திரும்ப இதே எண்ணில் மீண்டும் கூப்பிடுங்க என்று சொன்னார். எனக்கு மிகுந்த அலுவல் இருந்ததால் RESUME மட்டும் மின் அஞ்சல் செய்து விட்டு அந்த வங்கியின் வலை தளத்தை பார்க்க மறந்து விட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அழைப்பு. "SIR, YOUR RESUME IS SHORTLISTED AND YOU NEED TO TRAVEL TO DUBAI FOR THE FINAL INTERIEW. YOU HAVE TO BEAR ALL THE COST AND WILL BE REIMBURSED BY THE BANK SUBSEQUENTLY. CAN WE KNOW, IF YOUR ARE INTERESTED??? என்று ஒரே மூச்சில் பேசி முடிக்க, எனக்கு ஒன்றும் புரிய வில்லை.

காரணம், நான் இந்த பன்னாட்டு வங்கியில் சேர்ந்து மூன்று மாதம் தான் ஆகிறது. எனவே, நான் நாளை கூறுவதாக சொல்லிவிட்டு தொடர்பை (அட! அலைபேசி தொடர்புங்க) துண்டித்தேன். சம்பா வலை தளம் சென்று முதலில் அது ஒரு வங்கி தான், சீட்டு கம்பனி இல்லை (!) என்று உறுதி படுத்திக்கொண்டேன்.

நேர்முக தேர்வு ஞாயிறு அன்று இருந்ததால் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு (வழக்கம் போல் பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு) கிளம்ப திட்டமிட்டேன். அந்த வாரம் எனக்கு சேலம் கிளையில் வேலை இருந்ததால் சேலத்தில் அம்மா வீட்டில் தான் இருந்தேன். உண்மைய சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் சென்னை போறேன் என்று சொல்லிவிட்டு கெளம்பினேன். (நான் சென்னை வழியா தாங்க EMIRATES AIRLINESல டிக்கெட் போட்டு இருந்தேன். அதனால், நான் உண்மை சொல்லிட்டு தான் போனேன். பொய் சொல்லலை....ஹீ..ஹீ..ஹீஎஹீ). பொண்டாட்டிகிட்டேயும் அதே கதை தான். (ஆனாலும் என்னோட CID தங்கை பரணி நான் என்னோட பாஸ்போர்ட் எடுத்து வைத்ததை பார்த்து கண்டு பிடித்ததும், பிறகு சொன்னதும் தனி கதை).

ஷார்ஜாவில் இருந்த என்னோட மாமா சேகரிடம் போன் போட்டு ஏர்போர்ட் வர சொல்லிவிட்டேன். அவரையும் பார்த்து சில ஆண்டுகள் இருக்கும். இப்படி ஒரே கல்லுல பல மாங்காய். வந்தா மலை, போன மயிறு என சென்னை நோக்கி என் பயணம் தொடங்கியது. தெரிஞ்ச முகம் எதுவும் கண்ணில் படகூடாது என்பதற்காக A/C TWO TIERல டிக்கெட் போட்டேன். இல்லாட்டி எதுக்கு சென்னை போறோம்னு விளக்கம் சொல்லியே நாம ஓஞ்சி போக வேண்டி இருக்கும்.

வண்டி சேலம் ஜங்ஷன் விட்டு கிளம்பி சிறிது நேரத்தில் சேலம் டவுன் ஸ்டேஷன் அடைந்தது. எது நடக்க கூடாதுன்னு நான் நெனச்சேனோ அதுவே நடந்தது. WHAT A SURPRISE யுவராஜ்!! என்று ஒரு பரிச்சியமான குரல். சேலம் நரசுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பாலு அவர்கள் எனக்கு அருகே வந்து அமர்ந்தார். என்னோட வங்கியின் பெரிய வாடிக்கையாளர். எனக்கும் அவருக்கும் அருகருகே இருக்கைகள். சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க போனோம். காலையில் அவரே எழுப்பி விட்டார். "சென்னைல எங்க போறீங்க யுவராஜ், சொல்லுங்க. I CAN DROP U "என்றார். ஆஹா, இது என்னடா வம்பு என்று இதையும் சமாளித்து ஆட்டோ பிடித்து AIRPORT வந்து சேர்ந்தேன்.
EMIRATES AIRLINES கவுன்டரில் CHECK IN செய்த பொது ...................
CONT IN PART II

4 comments:

Priya said...

தொடக்கமே அசத்தல்... ம்ம் தொடருங்கள்!

//(வழக்கம் போல் பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு)//....இப்படி உண்மையெல்லாம் வெளியில சொல்லகூடாது:-)

YUVARAJ S said...

Thank you priya. Keep blogging.

ரோகிணிசிவா said...

அண்ணா, நீங்க பரவாஇல்லை,சவுதி வேலைக்கு வந்த கதையதான் எழுதரீங்க!, நம்ம நண்பர்,சாயுங்காலம் கிளம்பி பகரைன் போய் சரக்கு சாப்டுட்டு நைட் திரும்பி வந்த கதை எழுத ப்ளாக் போடறார்!(its not uncommon for Guys from Saudi to go to Bahrain for WWW-Weekend,Wine,Women)

GURU said...

இது நீங்கள் எழுதத் தேடிய வழி அல்ல
இது உங்கள் வலி
படித்ததில் புரிந்து கொண்டேன்

- Guru