வெட்டி முறிக்க வேற வேலை இருந்ததால கொஞ்ச நாலா ப்ளாக் எழுத வரல. சும்மா அங்க, இங்க படிகிரதோட இருந்தாச்சு.
ஆனா பாருங்க, நேத்து படிச்ச ஒரு மேட்டர் ர பாத்து ஏதோ எழுதனும்னு தோனுச்சு.
ஒரு நண்பரோட ப்ளாக் படிச்சேன்.
அவர் வெளிநாட்டுல நல்ல வசதியா வேலை செய்யுறார். அவரோட பொது நலம் கருதி ஊரு, பேரு வேண்டாமே!!
சில மாதங்கள் முந்தி சென்னை வந்ததாகவும், திரும்பி போரதக்கு ஒரு நாள் முந்தி கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு குடும்பத்தோட போயி போட்டோ எடுத்துகிட்ட தாகவும் போட்டு இருந்தார்.
எனக்கு படிச்சு அதிர்ச்சி ஆயிடிச்சு.!!!!!!!
அந்த திட்டம் என்பது வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்காக ஆரம்பிக்கபட்டது. மற்ற கேவலமான இலவச திட்டங்கள விட (எ. கா. இலவச டி.வி,) உன்னதமானது. வெளி நாட்டில் இருந்து கொண்டு ஆண்டுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இவர் இப்படி செய்தது என்னால ஏத்துக்க முடியல. (அண்ணன் நல்ல படிப்பு படிச்சு இருக்காரு, கை நிறைய சம்பளம் வாங்குறத அவரே ஒத்துக்கிட்டார்.)
பொறுக்க முடியாம அவரோட ப்ளாக்ல கீழ்கண்ட இந்த பின்னூட்டம் போட்டேன்:
Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply
13 ஜூன், 2010 12:09 am
அதுக்கு அவரோட பதில நீங்களே படிங்க:
ஆமாம்க தம்பி யுவராஜ்,
நான் nri தான், கைநிறைய சம்பாதிக்கீறேன் தான்,ஆனால் அது நிரந்தரமில்லை தம்பி,அதுவும் தவிர எனக்கு போட்டோ ஐடிக்கு அது தேவைப்பா தம்பி,நான் என்ன என்ன என் நாட்டுக்கு செஞ்சிருக்கேன்னு கணக்கு உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் ரிசெஷனில் nriக்கள் ஏகம் பேர் எப்போது வேலை போய் திரும்பி வருவோம் என்றே இருக்கின்றனர். அவங்க வந்தா இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.மேலும் அரசுக்கு நான் 5வருடம் வரி செலுத்தியிருக்கிறேன். இனி அங்கே வந்து வேலைபார்த்தால் செலுத்தப்போகிறேன்.
உன் nri வெறுப்பை என்னிடம் உமிழாதே, btw ஆறு மாதம் ஆகியும் எங்கும் காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை,அது ஒரு #### துடைப்பு.
13 ஜூன், 2010 12:24 pm
மேற்கண்ட பொறுப்பற்ற (பருப்பான!) பதிலை கண்டதும் என்னோட சமூக கோபம் இன்னும் அதிகம் ஆனது. அவருக்கு மீண்டும் சில கேள்விகள் (அவரோட பதிலை வைத்தே) கேட்டேன். அண்ணன் செம கடுப்பாகி அதை வெளியிடவில்லை.
இப்போது வேற வழி இன்றி அந்த கேள்விகளை பதிவர்களின் சபையில் வைத்து விவாதிக்க வேண்டி உள்ளது. என்னோட சில நியாயமான கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்!!!
a . போட்டோ ஐ.டி. க்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டு போடுற கார்டு எல்லாம் இருக்கே!!!! அப்புறம் எதுக்கு இது?
b . நீங்க சாம்பாரிக்கறது நிரந்தரம் இல்லை என்பதற்காக அடுத்தவன்னுக்கு (ஏழைக்கு) உரிமை உள்ள ஒன்றை தட்டி பறிப்பீர்களா?
c . எல்லா NRI களுமே பணக்காரர்கள் இல்லை. மாதம் வெறும் 600 ரியால் மட்டும் சம்பளம் வாங்கும் பரம ஏழைகள் அநேகம். அவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் உதவும். உங்களை போல recession ல வேலை இழந்து வரும் மேதைகளுக்கு இது ஒரு வரபிரசாதமா? (எந்த கோவில் பிரசாதம் அண்ணா???)
d . அரசுக்கு வரி செலுத்தி இருந்தால், அரசின் எல்லா திட்டங்களுக்கும் உரிமை கோருவீர்களா? இலவச காப்பீட்டு திட்டம் வரி செலுத்துபவருக்கா இல்லை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்கா?
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்:
a . Flight டிக்கெட் காசு குடுத்து எடுத்து வரீங்களா? இல்ல 'வெற்றி கோடி கட்டு' பார்த்திபன் மாதிரி withoutல வரீங்களா?
b . இலவச T .V (வண்ண தொலைகாட்சி சார்) குடுத்தாங்க. அப்படியே அதுவும் வாங்கியாச்சா?? நல்லா தெரியுதா?
எனக்கு உங்க NRI status மேல ஒரு காண்டும் இல்லைங்கண்ணா.... (வெறுத்து உமிழ ஒன்றும் இல்லை என்று புரிந்து கொள்க)
என்னா, நானும் உங்கள போல கை நிறைய சம்பாதிக்கும் ஒரு NRI தானுங்க.
அன்புடன்.......யுவராஜ்.
பதிவர்களே, என் உள்ள குமுறல்களை கொட்டி விட்டேன். நீங்களே இவர் செய்தது நியாயமா என்று ஒரு தீர்ப்பு சொல்லுங்க.
ஒருவேளை நான் ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குறேன் என்று கருதினால் மன்னிக்க.
இந்த பதிவின் நோக்கமெல்லாம்:
எதையும் துஷ்ப்ரயோகம் செயாதீர்கள்.
அடுத்தவன் உரிமையை தட்டி பறிக்காதீர்கள்.
எனக்கு யாரையும் நடுத்தெருவில் நிறுத்தி, குற்றம் சுமத்தி அசிங்கபடுத்த விருப்பமில்லை. எனவே, அவர் பெயர் மற்றும் ஊரை நான் வெளிஇடவில்லை.