Saturday, February 6, 2010

நான் சவுதி வந்த (சோக) கதை - பகுதி - III

பிசினஸ் சென்டரை தேடி பிடித்து போன போது ...........

அங்கே யாரும் இல்லை. "The interview starts at nine. You may have to wait please" என்றாள் ஒரு யுவதி. பசி வயிற்றை கிள்ள, ஒரு காபி சாப்பிடலாமா என்று ஒரு வினாடி யோசித்தேன். மறுபடியுமா?????? என்று வடிவேல் போல என் மூளை கதறியது. 2002இல் நான் முதல் முறை இங்கு வந்த போது இப்படி தான் ஸ்டார் பக்ஸ் காபி ஷாப்பில் ஒரு காபி ஆர்டர் செய்தேன். வந்தது 18 திர்ஹம் பில் மற்றும் ஒரு லிட்டர் காபி. 11மணிக்கு ஆரம்பித்த நான் ஒரு மணி வரை (வேறு வழி இல்லை இந்திய பணம் 200 ரூபாய்க்கு மேல தண்டம் அழுதாசே!) குடிச்சேன். சில மணிநேரம் கழித்து பேதி புடிங்கியது தான் மிச்சம். எனவே தான் ஸ்டார் பக்ஸ் போர்டு பார்த்ததுதும் என் மூளை மிரண்டது. வயிறும் லேசா கலங்கிவிடும் போல இருந்தது. எனவே காபி குடிக்கும் என்னத்தை மூட்டை கட்டி விட்டேன்.
8.45 மணிக்கு நேர்முக தேர்வர்கள் வர, நான் 9மணிக்கு உள்ளே பணிக்கப்பட்டேன்.
"மகனே, இன்னைக்கு உன்னை வெச்சு தான் முதல் போனி. நீ என்ன ஆக போறியோ இல்ல அவங்க என்ன ஆக போராங்களோ" நினைத்துகொண்டே உள்ளே சென்றேன். வழக்கம் போல சம்பிரயதாய கேள்விகள் / பதில்கள். நன்றாக போனது. நான் பேசும் போது சில புள்ளி விவரங்களை லட்சம் மற்றும் கோடிகளில் சொல்ல, அவர்களுக்கு புரியவில்லை. Oneman said "please speak in English". எனக்கோ தலை சுற்றியது. அடப்பாவிகளா, கிட்டதிட்ட 45 நிமிஷம் நான் கத்துனது எல்லாம் வீண் தானா??

I SAID " SIR, I AM SPEAKING IN ENGLISH". ??????

நல்ல நேரம், இன்னொருவர் என்னை காப்பாற்றினார். He said "Could you tell the numbers in millions and in US Dollars please?". உஸ்ஸ். கண்ணு கட்டுதே. நல்ல வேலை இவருக்கு கண்டிப்பா நான் பேசினது புரிஞ்சு இருக்கும்னு மனச தேத்திகிட்டேன். எல்லாம் முடிந்து நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். மாம்ஸ் வெய்டிங். "ஏன்டா நீ இன்டர்வியு குடுக்க வந்தியா? எடுக்க வந்தியா? இவ்ளோ நேரம் உள்ள என்ன செஞ்ச?" அவரிடம் கதை சொல்லிக்கொண்டு இருக்கும் போது, கோ-ஆர்டிநெடர் ஓடி வந்தார். "Can you come for a minute please. You are being called" என்ன கிரகம்டா இதுனு நெனச்சிகிட்டு உள்ளே போனேன். சம்பளம் பற்றி விவாதம் நடந்தது. 90% ஓகே என்று மனம் கூச்சச்சளிட்டது. வந்ததுக்கு சாதிச்சுட்டே மகனே!.

"Sorry for calling you again. Thank you for making it all the way from India. You will be called again in case if your shortlisted".

"சரி சரி, கண்டிப்பா நீங்க என்னை கூபிடுவிங்கனு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எங்களைவிட பத்து வருஷம் BANKING LA பின் தங்கி இருக்கீங்க. உங்களுக்கு ஆளு தேவைன்னு" நெனச்சிக்கிட்டே லாபி நோக்கி நடந்தேன்.

பின்னால் இருந்து ஒரு குரல். தமிழில். "யுவராஜ், எப்படி போச்சு?"

CONT IN PART IV.....

10 comments:

ரோகிணிசிவா said...

யாரு டா இது?



ரொம்ப தான் ...பண்றார் அவரு சவுதி வந்த கதை சொல்ல !

YUVARAJ S said...

என்ன பண்ணறது? எதுவுமே பில்ட்-அப் குடுத்த தான் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும். பொறுமையா படிங்க. ஏன்னா, பொறுமை போண்டா வினும் பெரிது.

ரோகிணிசிவா said...

மாப்பிள கதைய சொல்லு !போண்டா மெதுவா போடலாம்

ரோகிணிசிவா said...

மாப்பிள கதைய சொல்லு, நானும் பாத்து கிட்டே இருக்கேன், பிட் அ போட்ற, இது நல்லா இல்ல !

safras Aboobakker said...

Hey Superbb story..... There r some problem writing comments. I also in Dammam - sasi_sana2005@yahoo.com

YUVARAJ S said...

நன்றி சப்ராஸ். தொடர்ந்து படியுங்கள். நானும் உங்கள் வலைப்பூவை தொடர்கிறேன்.

Chandrika Shubham said...

Fish pond is quite interesting. I liked it. :)

YUVARAJ S said...

THANK YOU CHANDRIKA. KEEP READING AND POST YOUR COMMENTS.

ரோகிணிசிவா said...

இது கொஞ்சம் கூட நல்லா இல்ல, நான் என் பேரு உலகத்துக்கு தெரியட்டும்ன்னு தான் கமெண்ட் போடறேன் , ஆன, ஒரு கமெண்ட் போடறதுக்குள்ள, எத்தனை டெஸ்டு , அப்புறம்,your comment will be published afters authors approval,

இது எல்லாம் நல்லா இல்ல !
சொல்லிட்டேன்,,,,,,,,,,,,,
அழுதுருவேன்,,,,,,,,,,,,,,,

YUVARAJ S said...

அழாதிங்க. உங்க கமெண்ட் நாங்க கண்டிப்பா வெளி இடுவோம் . எங்கே, மேல பாருங்க பாக்கலாம்.....