ராவணன் - மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆவலாக போன பல பேருக்கு கல்ப்பாக பல்பு குடுத்த படம்
எல்லோரும் பதிவுல போட்டி போட்டுகிட்டு பிரிச்சு மேயறாங்க.
இதில் நான் இயக்குனர் தகரம் முனிரத்னம் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவர் ரொம்ப நல்லவர், உண்மை பேசுபவர். சத்தியவான்.
எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.
ஆங்கிலத்தில் PORTMANTEAU வகை சொற்கள் உண்டு. PORTMANTEAU என்றால் இரண்டு வார்த்தைகள் கலந்து ஒரு புதிய வார்த்தையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, MOTEL என்பது நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தை / தங்கும் விடுதியை குறிக்கும் ஒரு சொல். அது MOTORWAY + HOTEL ஆகிய இரண்டு சொற்கள் இணைந்த ஒரு PORTMANTEAU .
இது போல, ராவணன் என்பது ஒரு தமிழ் PORTMANTEAU . (எங்க சுத்தி எங்க வரோம் பாத்தீங்க இல்ல)
ராவணன் - அதாவது, இந்த சொல்லை நன்றாக பிரித்து பார்த்தால் ராவ + வந்தவன் என்றே பொருள் வருகிறது. நம்மை எல்லாம் உயிரோடு ராவுவதற்க்கே (அறுப்பதற்கே) இயக்குனர் தகரத்தால் எடுக்கப்பட்ட படம்.
தான் படம் எடுத்ததன் நோக்கத்த சாமர்த்தியமா டைடிலுகுல்லையே ஒளிச்சு வெச்சு சொல்லி இருக்கிறார்.
மடப்பசங்க எல்லோரும் (நானும் சேத்தி தான்) டைடில சரியாய் புரிஞ்சிக்காம, வரிஞ்சி கட்டி வரிசைல நின்னு, ராமாயணம் ரீமேக்கு, இயக்குனர் தகரம் எடுத்து இருக்காரு போயி பாத்துட்டு, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி திரியரிங்க.
எல்லோரும் அவர விடுங்க பா.......ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.....டைட்டில்ல உண்மைய தான் சொல்லி இருக்காரு.....
( படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே நானும் நண்பர்களும் கார் எடுத்துகிட்டு ஒரு மணி நேரம் ஒட்டி, ரெண்டு மணிநேரம் இம்மிக்ரேஷன் வரிசியைல நின்னு பஹ்ரைன் போயி (நாடு விட்டு நாடு!!!) முதல் ஷோ பாத்தோம்........ )
சேம் ப்ளட் யா. ஸோ, கூல் டௌன் கூல் டௌன்!!!!
என்னுடைய அனுபவங்கள், ரசித்த நகைச்சுவை சம்பவங்கள், அறிந்த செய்திகள், சமூக கோபம் ஆகிய வற்றின் மொத்த கலவை இது....
Tuesday, June 29, 2010
Wednesday, June 23, 2010
மயில் கோழியான கதை!!!
இன்று மதியம் உணவு அருந்த நானும் நண்பர் குமாரும் மதீனா உணவு விடுதிக்கு போன பொழுது நடந்தது இது.
சாப்பிட்டு விட்டு பணம் குடுக்க போனபோது வழக்கம் போல நம்ம முபாரக் பாய் எவனடா வம்பு இழுக்கலாம் என்று கல்லாவில் காத்துக்கொண்டு இருந்தார்.
நண்பர் குமார் புதிதாக வந்ததால், அவரை பார்த்து," சார் புதுசா இருக்கீங்க, நமக்கு எந்த ஊரு" என்று கேட்டார்.
"முதல்ல உம்மோட ஊற சொல்லும் வோய்"
"நமக்கு மயிலாடுதுறை சார்"
வூடு கட்ட களம் அமைச்சு குடுத்தாச்சு. நாம சும்மா இருப்போமா??
" பாய், ஒரு சின்ன சந்தேகம், உங்க ஊருல நெறிய மயில் ஆடுமா? பேரு அமர்களமா மயில் ஆடும் துறைன்னு இருக்கே???"
" ஆமாங்க, எங்க ஊரு அவ்ளோ சிறப்பான ஊரு"
" பாய், ஆடுறது எல்லாம் ஆம்பளை மயிலா இல்ல பொம்பள மயிலா?"
(பெண் மயிலுக்கு தோகை இல்லை, ஆண் மயிலுக்கு தான் தோகை உண்டு. அவர் பெண் மயில் என்று சொல்லி வாயாக்குடுதால் மடக்கலாம் என்று பிளான்)
" எந்த மயில் ஆடுனா என்ன? அது ரெண்டு காலுல ஆடப்போவுது" என்று முபாரக் சமாளிக்க பார்க்க.....
விடுவோமா நாங்க!!!
" ஹலோ, பாய், தோகை விரிச்சு ஆடுன அதுக்கு பேரு மயில். இல்லாட்டி அது ஒரு வளந்த, பெரிய கோழி. ஸோ, இனிமே உங்க ஊரு பேரு கோழியாடும்துறை. யாரவது ஊரு பேரு கேட்டா, இப்படியே maintain பண்ணுங்க. வரட்டா.....என்று பில் செட்டில் பண்ணி நடையை கட்டினோம்.
பின்னால் பாயின் குரல் கேட்டது. " இவங்க வெறிய தீத்துக்க இன்னைக்கு நாம தான் சிக்கினோம் போல!!!!!!!"
நாங்கெல்லாம் தீப்பொறி திருமுகத்தையே ரத்த திருமுகம் ஆகுனவுங்க......

Saturday, June 19, 2010
இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்!
டிசம்பர் 1 , திங்கட்கிழமை, நான் சேர்ந்தேன். டிசம்பர் 3 தான் கடைசி வேலை நாள். மீண்டும் அலுவலகம் டிசம்பர் 13 திகதி தான்.
காரணம்? ஹஜ் விடுமுறை.!!!!
சத்திய சோதனை!
கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு அரபி மொழியில் ஒரு லெட்டர் குடுத்தார்கள். இன்னார், இந்த வங்கியில் வேலை செய்கிறார். அவருடைய iqama (குடிஉரிமை அட்டை) நாங்கள் வழங்க ஏற்பாடு செய்வதால், அவரிடம் வேற எந்த அடையாள அட்டையும் இல்லை என்று எழுதி இருந்தது.
வங்கியில் குடுத்த கடிதத்தை எப்போதும் (ஒரிஜினல்) கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எங்காவது போலீஸ் அல்லது முத்தவா (religious police ) கேட்டால் காட்ட வேண்டும் என்றும் சொன்னார்.
ரியாதில் சில நண்பர்கள் இருப்பதால், அங்கே போகலாம் என்று ஒரு திட்டம் போட்டேன். அதற்க்கும் வேட்டு வைத்து விட்டார்கள். இங்கே iquama இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. ஏன், பஸ் அல்லது ரயில் டிக்கெட் கூட வாங்க முடியாது!!! மேலும் ரியாத் போகும் வழியில் சில செக் பாயிண்ட் இருப்பதாவும், சில சமயம் போலீசார் அந்த கடிதத்தை (குறிப்பாக ஊரு விட்டு ஊரு போனா) மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி தடுத்து விட்டனர்.
பத்து நாள் இருக்கே, பேசாம ஊருக்கு போயி வரலாம் நு கேட்டேன். அய்யே....., நீ நெனக்குற மாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு போயிட்டு வர முடியாது. எங்க நாட்ட விட்டு வெளிய போகனும்னாலும் எக்ஸிட் விசா வேணும், iquama இல்லாம ஒன்னும் பண்ண முடியாது... BAD LUCK என்று சொல்லிவிட்டார்கள்.
நான் எந்த முடிவு எடுத்தாலும் அது iquama என்ற முட்டுச்சந்தில் வந்து நின்றது.
ஸோ, பத்து நாள் நான் complete ஹவுஸ் அர்ரெஸ்ட். எங்கும் போக முடியாது.
உலகத்துலேயே ஒரு நாட்ட விட்டு வெளியேற விசா கேக்குற ஒரு நாடு சவூதியா தான் இருக்கும்.
ஆபீஸ் கார் வேணும்னா பயன் படுத்திக்கோங்க, என்று சொல்லி டிரைவர வர வழைத்தார்கள். வந்தவர் பேரு ஜாவித், ஒரு பாகிஸ்தானி. எனினும், அவருக்கும் அஞ்சு நாள் ஹஜ் விடுமுறை இருப்பதாகவும், மற்ற நாட்களில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் என்று சொன்னார். முதலில் அவரை ஒரு நல்ல இந்திய உணவு விடுதிக்கு அழைத்து செல்ல சொன்னேன். மதினா உணவு விடுதியை அறிமுகம் செய்து வைத்தார். தஞ்சாவூர்கார்கள் நடத்துகிறார்கள், ஓரளவுக்கு பரவா இல்லை. இருவரும் உணவு அருந்தி கிளம்பினோம். பின்னர், வரும் வழியில் ஒரு சிம் கார்டு வாங்கினேன்.
நல்ல மனுஷன், முன் பின் தெரியாத என்னை நம்பி அவரோட iquama காபியை சிம் வாங்க குடுத்தார். நமக்கு தான் அந்த எழவெடுத்த iquama இல்லையே. பின்னர் ஆபீஸ் நோக்கி பேசிக்கொண்டே போக ஆரம்பித்தோம்.
ஸாப், நான் சாயங்காலம் உங்களை ரூம்ல டிராப் பண்ண வரவா என்று கேட்க, ஒன்னும் வேண்டாம் ஜாவித் பாய், நாலு பில்டிங் தாண்டி தானே ஹோட்டல் நான் நடந்து போய்கிறேன் என்று சொன்னேன்.
ஜாவித், இனிமே என்னை 'ஸாப்' என்று கூப்பிட வேண்டாம். நீயும் என்னோட வயதுக்காரன் தான். என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்று சொன்னேன். என்னை புன்னைகைதபடி ஒரு பார்வை பார்த்தான். க்யா ஹுவா ரே என்றேன். ஒன்னும் இல்லை யுவராஜ் ஜி. என்னை இது வரை யாரும் பெயர் சொல்லி கூப்பிடும் படி யாரும் சொல்லியது இல்லை. அதான் ஆச்சர்யமாக இருக்கு. நானும் நல்லாக தான் படித்தேன். பத்தாவதில் பள்ளியில் முதலாவதா வந்தேன். வீட்டில் எட்டு பேரு. மேற்கொண்டு படிக்க வசதி இல்லாதால் டிரைவர் வேலைக்கு செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆச்சு, ஒரு பத்து வருஷம் இங்க வந்து!
கேட்கும் போது பரிதாபமாக இருந்தது. ஜாவித், உனக்கு மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கிடைக்காதால் நீ டிரைவர் வேலை பார்க்க வேண்டியதா போய்விட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த வேலையில் இருக்கிறேன். அவ்வளவு தான். நீ எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. கடவுள் உனக்கு நிச்சயம் வேறு வகையில் உதவுவார் என்று சமாதானம் செய்தேன்.
(ஜாவிதை நான் முதல் முதலில் சந்தித்த போது என்னிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசினான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. பின்னர் நான் இந்தியன் என்று தெரிந்ததும் ஹிந்தி (அவனுக்கு உருது) பேச ஆரம்பித்தான். நிச்சயம் அவன் படிக்கற வாய்ப்பு இல்லாததால் இந்த வேலை செய்கிறான் என்று நான் நினைத்தேன். அது சரியாக இருந்தது)
அலுவலகத்தில் ஒரு வேலையும் இல்லை. Iquama இல்லாமல் ஒன்னும் நடக்காது என்று சொல்லி விட்டார்கள். பொழுது போக வேண்டும் என்பதற்காக credit policy manual எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு சிட்டி வங்கியின் ஒரு பகுதியாக (இந்த வங்கி) இருந்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு சில circulars மட்டுமே.
மாலை 5 . 30 . அநேகமாக எல்லோரும் போய்விட்டு இருந்தார்கள். வீட்டுக்கு போவதில் ரொம்ப நேரக்கட்டுப்பாடோட இருக்காங்க. யாரும் இல்லாதாதால், நானும் ஹோட்டல் நோக்கி கிளம்பினேன்.
நேற்று இரவு நேரம் செக் இன் செய்ததால் சில விஷயங்களை சரியே கவனிக்க வில்லை. அயர்ச்சி வேறு. இப்பொழுது சிறிது நோட்டம் விட ஆரம்பித்தேன். ஹோட்டல் நுழைவு கேட்டில் பலத்த பாதுகாப்பு இருந்தது. நான்கைந்து பாதுகாவலர்கள் அதிநவீன ஆயுதங்கள், வாக்கி டாக்கி சகிதம் எல்லா வண்டியையும் சோதனை போட்டு அனுமதித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஹோட்டல் புல்வெளியில் ஒரு நடை போனேன். மொத்தம் நாலு கேட் இருந்தது. எல்லா கேட்டிலும் அதே போல பாதுகாப்பு. கிட்டதிட்ட இருபது பேர். யோசித்த படியே லாபி நோக்கி நடந்தேன்.
லாபிக்குள்ளே போவதற்கு ஒரு circular கதவு இருக்கும். அது சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த கதவுக்கு வெளியே ஒரு பத்து மீட்டர் தள்ளி ஒரு கூடாரம் போல இருந்தது. காற்று போக சில ஓட்டைகள். என்னவாக இருக்கும் என்று ஒரு ஆசை. காசா, பணமா, போயி பாக்கலாமே என்று போனால்....
கிர்ர்ர்ர் அடித்து விட்டது.
அந்த கூடாரத்துக்குள் ஒரு 4 x 4 ஜீப். ஒருவர் ஓட்டுவதற்கு தயாராக. இன்னொருவர் இயந்திர துப்பாக்கியை இயக்க தயாராக. இந்த ஜீப் சரியா ஹோட்டல்லின் நுழைவு வாயிலை நோக்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரவது தாக்குதல் நடுத்தும் நோக்கில், உள்ளே வந்தால், முன்னேறா விடாமல் தடுப்பதற்கு!
இதுக்கு மேல இங்க தங்க நான் என்ன ??????.
முதலில் ஜாவேதுக்கு போன் செய்தேன். ஜாவேத், எனக்கு ஹோட்டல் காலி பண்ணிட்டு, ஒரு அபார்ட்மென்ட் பாக்கணும், ஏற்பாடு பண்ணு. நாளை காலையே போயி தேடலாம்.
"எதாவது பிரச்சினையா யுவராஜ் ஜி? " இது ஜாவித். அதெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்கு காலைல பேசலாம் நு செல்பேசியை அணைத்தேன்.

Tuesday, June 15, 2010
இப்படியும் காலன் வருவானா?

இரண்டு நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடந்த துயர சம்பவம்.
பிதா ஹரிஸ் (FIDA HARRIS) ஐந்து வயது நிரம்பிய அழகான குழந்தை. கடந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு சென்று வந்து இருந்தாள். விதி எந்த ரூபத்தில் காலனை வரவைப்பான் என்று தெரியாமல் ஜூன் 13ம் தேதி பள்ளிக்கு கிளம்பினாள். ஆனால் திரும்பவில்லை. ஏன் தெரியுமா? பள்ளிக்கு சென்ற பிதா, தான் சென்ற வேனிலே தூங்கிவிட, அறிவு கெட்ட டிரைவர் அதை பார்க்காமல் வண்டியை பூட்டி விட்டு போய் விட்டான். பொதுவாக இந்த வேன்கள் ஆள் அரவமற்ற பிரேதேசத்தில் தான் நிறுதப்ப்படுமாம். இங்கு வெய்யில் 50 டிகிரி தாண்டுவது சரவ சாதாரணம். அலட்சியத்தின் விளைவு, மூச்சு விட முடியாமல், உதவிக்கு யாரும் இல்லாமல், வெப்பத்தில் அவதிப்பட்டு, ஒரு குழந்தையின் மரணம்.
விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
http://arabnews.com/saudiarabia/article65581.ece
அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அக்குழந்தையை பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கும், உற்றோருக்கும் கடவுள் மன தைரியத்தை தந்து துணை இருப்பாராக.
சோதனை மேல் சோதனை...
மீண்டும் சவுதி கதை கேக்கலாமா........
ஜோதிஜி என்னனு நீங்க கேளுங்களேன்? செந்தில் அண்ணே நீங்களாவது கேளுங்களேன்? அஷீதா அட்லீஸ்ட் நீங்க? விஜய் அண்ணா, ராகவன் அண்ணா, நீங்க யாரும் கேக்காட்டி நான் சொல்லாம விட்டுடவுனா என்ன............
28 / 11 / 2008 அன்று கோவைக்கு பை பை சொல்லி, air arabia புடிச்சு ஷர்ஜாஹ் கிளம்பியாச்சு. சவுதியில் ஜல்லி அடிக்கும் வாய்ப்பு எதுவும் இல்லாததால், கடைசியா ஒரு முறை ஷார்ஜாவில் 'தாக ஷாந்தி' முடித்துவிட்டு ( பீராய நமக, பேக் பைப்பராய நமக) தம்மாம் வந்து எறங்கினேன்.
8 . 3 0 க்கு குடியுரிமை சோதனைக்கு நின்று மூணு மணிநேரம் (தெனற தெனற ....ஆவ்வ்வ்வ்) கழித்து வெளி வந்தேன். இது போல் ஒரு மட்டமான அனுபவம் இருந்தது இல்லை. வந்து இறங்கியதே ஒரே ஒரு விமானம். மொத்தம் சுமார் 150 பேர். இருந்ததோ பத்து கவுண்டர். அதில் ஒருவரும் இல்லை. முதலில் பெண்கள் அனைவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்தார்கள். (மவனே, நம்மள மூணு மணி நேரம் 'டர்' ஆகிட்டு, இனி என்ன 'இர்ர்'...) நிக்க வேச்சாணுக. ஆண்கள ரெண்டு வரிசையா நிக்க வேச்சாணுக. அரபி டிரஸ் போட்டவன் எல்லாம் அஞ்சு நிமிஷத்துல போயிட்டான். மீதி இருந்தவன் எல்லாம் EXPAT தான். ஒரு கப்பி தலையன் வந்து ஒவ்வொரு பாஸ்போர்ட்டா பார்த்தான். ஒரு சிலரை மட்டும் தனி வரிசையில் நிக்க வெச்சான். இடையிலே சூட் போட்டு இருந்த ஒரு வெள்ளைக்கார மவராசன கூப்பிட்டு அனுப்பினான். இப்படி வரிசை மாறி பந்தாடி ஒரு வழியா வெளிய வந்தேன். அட்லீஸ்ட் FULL FORMALSல வந்து இருந்தா ஒருவேளை மதிச்சி இருப்பானோ என்னவோ. பக்கி மாதிரி பழைய ஜீன்சும் பரட்டை தலையும் பாத்து லேபர்னு நெனச்சு இருப்பான்.
நமக்கு எப்போ 7 . 50 F . M . (அதாங்க ஏழரை) தனியா வந்து டியூன் போட்டு இருக்கு? வழக்கம் போல நாலாந்து வாத்தியக்கரங்களை கூட்டிகிட்டு வந்து... அப்பப்ப.....போதும்டா சாமீ.
நல்ல வேலை, நம்ம டிரைவர் அண்ணன் ஒன்னும் சொதப்பலை. கரெக்ட்டா சும்மா கன் மாதிரி வந்து விட்டு இருந்தார். அவட வந்தது நம்ம கேரளத்து சேட்டன் அல்லோ...ஒரு கொழப்பமும் இல்லா.
30 நாட்களுக்கு மங்களம் பாட ஹோட்டல் லீ மெரிடியன்ல ரூம் போட்டு இருந்தார்கள். நன்றாக தூங்கிவிட்டு, மறுநாள் எழுந்து உற்சாகமாய் கிளம்பினேன். முதல் அனுபவம், அதுவும் சவுதி போன்ற ஒரு நாட்டுல....நிறைய கேள்விகள், மனதுக்குள்....
01 .12 .2008 .
எங்களோட DIVISION HEAD (DH) விடுமுறையில் இருந்ததால் ACTING DH அவர்களை சந்தித்து பணியில் சேர்ந்தேன். எங்களுடைய உரையாடல் INDIAN BANKING SYSTEM பற்றி நன்றாக போய்க்கொண்டு இருந்தது கொஞ்ச நேரத்துல:
"RAJ, WHEN DID U ARIVE FROM INDIA EXACTLY, WAS IT YESTERDAY'? என்று கேட்டார்.
இதுல என்னடா வில்லங்கம், ஒரு வேலை அஷ்டமி, நவமி பாக்குராரோ என்று யோசினை செய்து கொண்டே "YES SIR' என்றேன்.
" IN THIS CASE, YOU HAVE JUST ARRIVED WITH AN ENTRY VISA. SORRY RAJ, BAD LUCK TO YOU"
வந்த வேகதுலையே ரிவிட்டா? ஐயோ......ஆப்பு எனக்கு வெச்சாங்களா, இல்ல நானே ஆப்ப தேடி போயி அது மேல ஜம்முனு உட்க்காந்துகிட்டனா.......தெரியலையே....
என்னனு சொல்லவா.....
இப்போ வரேன் ....நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.......
Monday, June 14, 2010
சுவாரஸ்ய சம்பவங்கள் ரெண்டு.....
சம்பவம் 1 :
இன்று நானும் என்னோட சக அலுவலரும் (அவன் ஓர் சவுதி) ஒரு விஷயமாக வெளிய போக வேண்டி இருந்தது. நான் அவனை ஒரு பத்து நிமிடம் கழித்து கார் பார்கிங்க்கு வர சொல்லி விட்டு மறந்துவிட்டேன். தவறு முழுக்க என்னோடது தான்.
என்னோட மொபைலில் அழைப்பு: RAJ WHERE ARE YOU? MAJD HERE. PLEASE COME BARKING. VERY HOT...VUF..VUF...COME FAST
மணி 11 . 40 . சும்மா சுட்டு எரிக்கும் வெயில். பாவம் அவன். எனக்கு என்மேலே எரிச்சல் வந்தது. அதோடு அவன் பேசிய இங்கிலீஷ் வேறு செம டார்ச்சர். அந்த கடுப்பிலும் என் குரங்கு மனம் காமடி பண்ணியது. அவன் சொன்ன மாதிரியே நாய் போல ஊளையிட்டுகிட்டு அவன் முன் நின்னால் எப்படி இருக்கும்??? அவன் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்?? என்று நினைக்கும் போதே கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு வந்தது. (YOU ONLY TOLD ME....PLEASE COME BARKING.!!!)
I AM WAITING SUN. YOU LAUGHING? இது அவன். SORRY MAN. HAD GOT A GUD SMS STUFF, JUST READ AND LAUGHING என்று சமாளித்து கிளம்பினோம்.
குறிப்பு: அரபியில் 'P' உச்சரிப்பில் எந்த எழுதும் கிடையாது. எனவே அவர்கள் 'P' என்பதை "B" என்று சொல்லுவார்கள். B(P)ARKING, B(P)ANDA, B(P)ROGRESS, B(P)AYMENT..
உச்ச கடுப்பில் இருந்த அவன் (கடும் வெய்யில் பாவம்), அவனுடைய உச்சரிப்பால் என் விலா எலும்பை நோகடித்து விட்டான்
சம்பவம் 2 :
மதியம் NERIYA வேலை இருந்ததால் உணவை தியாகம் பண்ண வேண்டி இருந்தது. 15ஆம் திகதிக்குள் PROPOSAL SUBMIT பண்ணியாகணும். (லவ் ப்ரோபோசல் இல்லேங்க, கிரெடிட் ப்ரோபோசல்). நாங்கள் இருப்பது என்னவோ REGIONAL OFFICE , பேருக்குதான். ஆனால் கான்டீன் எதுவும் இல்லை. அலுகலகமோ ஊருக்கு வெளியே. பக்கத்துல இருந்த பகாலாவுல (MINI STORE ) கொஞ்சம் JUNK வாங்கி திரும்பினேன். லிப்ட்இல் ரெண்டு சவுதி இளைஞர்கள் தென்பட்டார்கள்.
சவுதி: சலாம் வாலேக்கும்.
நான்: வாலேக்கும் சலாம்...
சவுதி: ARE YOU FROM INDIA?
நான்: YAA ..
சவுதி: (கட்டை விரலை உயர்த்தி) VALLAH, GOOD. YOU KNOW I AM GOING BANGALORE. GOING TO STUDY MASTERS IN COMPUTER SCIENCE. THEN I WILL GET TRAINING IN WIPRO. INDIA IS GREAT
நான்: GUD CONGRATS.
மிகவும் சந்தோஷமாக காணப்பட்டான். பின்னர் ஒரு பேப்பர காட்டினான். அது BANK GUARANTEE க்காண விண்ணப்பம். VISA FORMALITY க்கு என்று நினைகிறேன். இரண்டாம் தளத்தில் இறங்கும் போது.....HURREY, I LOVE INDIA....என்று அவன் கத்த, எனக்கு என்னோட நாட்டை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு சில வினாடிக்கு தலைக்கனம் எட்டி பார்த்தது. அவனை பார்த்து 'ஜெய் ஹிந்த்' என்று கூறி விடை பெற்றேன். அவனுக்கு புரிந்து இருக்குமா? தெரியவில்லை. பெங்களூர் போனதும் ஒருவேளை புரிந்து கொள்வான்.

Sunday, June 13, 2010
வேண்டாம் இந்த சுயநலம்.........
வெட்டி முறிக்க வேற வேலை இருந்ததால கொஞ்ச நாலா ப்ளாக் எழுத வரல. சும்மா அங்க, இங்க படிகிரதோட இருந்தாச்சு.
ஆனா பாருங்க, நேத்து படிச்ச ஒரு மேட்டர் ர பாத்து ஏதோ எழுதனும்னு தோனுச்சு.
ஒரு நண்பரோட ப்ளாக் படிச்சேன்.
அவர் வெளிநாட்டுல நல்ல வசதியா வேலை செய்யுறார். அவரோட பொது நலம் கருதி ஊரு, பேரு வேண்டாமே!!
சில மாதங்கள் முந்தி சென்னை வந்ததாகவும், திரும்பி போரதக்கு ஒரு நாள் முந்தி கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு குடும்பத்தோட போயி போட்டோ எடுத்துகிட்ட தாகவும் போட்டு இருந்தார்.
எனக்கு படிச்சு அதிர்ச்சி ஆயிடிச்சு.!!!!!!!
அந்த திட்டம் என்பது வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்காக ஆரம்பிக்கபட்டது. மற்ற கேவலமான இலவச திட்டங்கள விட (எ. கா. இலவச டி.வி,) உன்னதமானது. வெளி நாட்டில் இருந்து கொண்டு ஆண்டுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு இவர் இப்படி செய்தது என்னால ஏத்துக்க முடியல. (அண்ணன் நல்ல படிப்பு படிச்சு இருக்காரு, கை நிறைய சம்பளம் வாங்குறத அவரே ஒத்துக்கிட்டார்.)
பொறுக்க முடியாம அவரோட ப்ளாக்ல கீழ்கண்ட இந்த பின்னூட்டம் போட்டேன்:
Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply
13 ஜூன், 2010 12:09 am
அதுக்கு அவரோட பதில நீங்களே படிங்க:
ஆமாம்க தம்பி யுவராஜ்,
நான் nri தான், கைநிறைய சம்பாதிக்கீறேன் தான்,ஆனால் அது நிரந்தரமில்லை தம்பி,அதுவும் தவிர எனக்கு போட்டோ ஐடிக்கு அது தேவைப்பா தம்பி,நான் என்ன என்ன என் நாட்டுக்கு செஞ்சிருக்கேன்னு கணக்கு உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் ரிசெஷனில் nriக்கள் ஏகம் பேர் எப்போது வேலை போய் திரும்பி வருவோம் என்றே இருக்கின்றனர். அவங்க வந்தா இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.மேலும் அரசுக்கு நான் 5வருடம் வரி செலுத்தியிருக்கிறேன். இனி அங்கே வந்து வேலைபார்த்தால் செலுத்தப்போகிறேன்.
உன் nri வெறுப்பை என்னிடம் உமிழாதே, btw ஆறு மாதம் ஆகியும் எங்கும் காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை,அது ஒரு #### துடைப்பு.
13 ஜூன், 2010 12:24 pm
மேற்கண்ட பொறுப்பற்ற (பருப்பான!) பதிலை கண்டதும் என்னோட சமூக கோபம் இன்னும் அதிகம் ஆனது. அவருக்கு மீண்டும் சில கேள்விகள் (அவரோட பதிலை வைத்தே) கேட்டேன். அண்ணன் செம கடுப்பாகி அதை வெளியிடவில்லை.
இப்போது வேற வழி இன்றி அந்த கேள்விகளை பதிவர்களின் சபையில் வைத்து விவாதிக்க வேண்டி உள்ளது. என்னோட சில நியாயமான கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்!!!
a . போட்டோ ஐ.டி. க்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டு போடுற கார்டு எல்லாம் இருக்கே!!!! அப்புறம் எதுக்கு இது?
b . நீங்க சாம்பாரிக்கறது நிரந்தரம் இல்லை என்பதற்காக அடுத்தவன்னுக்கு (ஏழைக்கு) உரிமை உள்ள ஒன்றை தட்டி பறிப்பீர்களா?
c . எல்லா NRI களுமே பணக்காரர்கள் இல்லை. மாதம் வெறும் 600 ரியால் மட்டும் சம்பளம் வாங்கும் பரம ஏழைகள் அநேகம். அவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் உதவும். உங்களை போல recession ல வேலை இழந்து வரும் மேதைகளுக்கு இது ஒரு வரபிரசாதமா? (எந்த கோவில் பிரசாதம் அண்ணா???)
d . அரசுக்கு வரி செலுத்தி இருந்தால், அரசின் எல்லா திட்டங்களுக்கும் உரிமை கோருவீர்களா? இலவச காப்பீட்டு திட்டம் வரி செலுத்துபவருக்கா இல்லை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்கா?
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்:
a . Flight டிக்கெட் காசு குடுத்து எடுத்து வரீங்களா? இல்ல 'வெற்றி கோடி கட்டு' பார்த்திபன் மாதிரி withoutல வரீங்களா?
b . இலவச T .V (வண்ண தொலைகாட்சி சார்) குடுத்தாங்க. அப்படியே அதுவும் வாங்கியாச்சா?? நல்லா தெரியுதா?
எனக்கு உங்க NRI status மேல ஒரு காண்டும் இல்லைங்கண்ணா.... (வெறுத்து உமிழ ஒன்றும் இல்லை என்று புரிந்து கொள்க)
என்னா, நானும் உங்கள போல கை நிறைய சம்பாதிக்கும் ஒரு NRI தானுங்க.
அன்புடன்.......யுவராஜ்.
பதிவர்களே, என் உள்ள குமுறல்களை கொட்டி விட்டேன். நீங்களே இவர் செய்தது நியாயமா என்று ஒரு தீர்ப்பு சொல்லுங்க.
ஒருவேளை நான் ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குறேன் என்று கருதினால் மன்னிக்க.
இந்த பதிவின் நோக்கமெல்லாம்:
எதையும் துஷ்ப்ரயோகம் செயாதீர்கள்.
அடுத்தவன் உரிமையை தட்டி பறிக்காதீர்கள்.
எனக்கு யாரையும் நடுத்தெருவில் நிறுத்தி, குற்றம் சுமத்தி அசிங்கபடுத்த விருப்பமில்லை. எனவே, அவர் பெயர் மற்றும் ஊரை நான் வெளிஇடவில்லை.

Subscribe to:
Posts (Atom)