இத எழுதலேனா எனக்கு தலையே வெடிச்சுடும்....
ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு நடந்த ஒரு சம்பவம் என்னை எழுத தூண்டியது.
இன்னைக்கு வியாழக்கிழமை, வார கடைசி. பஹ்ரைன் போகல. பாஸ்போர்ட்ல பேஜ் காலி ஆனதால (சங்கீதால டீ குடிக்க பஹ்ரைன் போன இப்படி தான் ஆகும்) தம்மாம் போயி JUMBO PASSPORT க்கு அப்ளை பண்ணிட்டு வந்து நல்லா தூங்கிட்டேன். நண்பர் FIRDAUS ஒரு 7 மணிக்கு கூப்பிட்டு என்ன பண்ணலாம்னு கேட்டார். மதினா ரெஸ்டாரன்ட் போயி லைட்டா இட்லி சாப்பிட்டு ஊரு சுத்த போலாம்னு பிளான் பண்ணோம்.
சாப்பிட்டு கீழ இறங்கி வந்தோம். சாலையில் ஒரு பாட்டு இரைச்சல். 
'டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போடா யாரும் இல்ல.......'
பாடல் வந்த திசைய நோக்கி பாத்தா, அது ஒரு HUMMER H2. 
நான் சொன்னேன், "பாருங்க FIRDAUS, நம்ம ஆளுங்க இங்க வந்தும் அடங்க மாட்டேன்கறாங்க". சொல்லி முடிக்கல, அந்த வண்டி எங்க பக்கதுல வந்து நின்னுச்சு. 
கொக்க மக்க, நாம பேசினது கேட்டு இருக்குமோ....
இறங்கினவன் ஒரு சவுதி. உள்ள இருந்தவனும் சவுதி தான். ஆனா வண்டில பாடுறது தமிழ் பாட்டு, உச்ச ஸ்தாயியில். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி..
நாங்களே போயி அவன்கிட்ட பேச்சு குடுத்தோம். 
HAI, FROM WHERE YOU GOT THIS SONG?' இது நம்ம நண்பர்.
நல்லா சமாளிக்கற அளவுக்கு அழகா தமிழும் மலையாளமும் கலந்து கட்டி அடிச்சான். 
"என்னமா எப்படி இருக்க? எந்த ஊரு? கேரளாவா? காலிகட்டா?" 
எனக்கோ மயக்கம் வாராத குறை தான். "இல்ல, நான் சென்னை",  எனக்கு அதுக்கு மேல பேச்சு வரல. மயக்கம் தான் வந்தது. 
ஒருவேளை அவன் கேரளாலா /தமிழ்நாட்டுல படிச்சு இருக்கலாம். அவன்கிட்ட 'பை' சொல்லிட்டு போகும்போது  எங்கள பாத்து தமிழ்ல ஒரு டயலாக் அடிச்சானே பாக்கணும்.
'உங்க ஊரு ஷகிலா எல்லாம் நம்ம பிரண்டு தான்' 
எப்படி இப்படி....
